தங்கம் சார் நீங்க.. 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்.. யார் அந்த சிறுவன் தெரியுமா?
ஜெர்மனியில் நடந்த கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித் சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ வைரல்

மோட்டார் ரேஸிங் வீரரான 13 வயது சிறுவனிடம் நடிகர் அஜித்குமார் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. யார் அந்த வீரர் என்பதைத் தான் பலரும் தேடி வருகிறார்கள். இந்த சிறு வயதில் இப்படியொரு திறமையா என்றும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் கார் பந்தயத்தில் அலாதிப் பிரியம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்
குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு படத்திற்குப் பின் புதிய படத்தில் கமிட் ஆகாமல் உலக நாடுகளில் நடக்கும் ரேஸிங் விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார். தற்போது, ஜெர்மனியில் ஜிடி4 ஐரோப்பியன் கார் ரேஸ் பந்தயம் நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஜித்தும் பங்கேற்றுள்ளார். அப்போது சிறு வயது ரேஸிங் வீரரிடம் அஜித் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் யார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. 13 வயது நிறைந்த அச்சிறுவன் பெயர் ஜேடன் இமானுவேல். இவர் ஒரு தமிழன். ஜேடன் பிறந்தது சென்னை. ஜேடனுக்கு இயல்பாகவே சைக்கிளிங், ரேஸிங் மீது சிறு வயதில் இருந்தே ஈடுபாடு இருந்துள்ளது. இதையறிந்த அவரது தந்தை ஜேடனுக்கு மோட்டார் பைக் ரேஸிங்கை அறிமுகப்படுத்தி, பயிற்சி செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
வெற்றி நடை போடும் ஜேடன்
10 வயதில் FIM MiniGP எஎ்று கூறும் ஜெர்மனியில் நடைபெறும் டூவீலர் ரேஸிங்கில் பங்கேற்ற ஜேடன் தொடர்ந்து அதில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகிறார். FIM MiniGP என்பது இளம் வீரர்கள் கலந்துகொள்ளும் மோட்டார் சைக்கிள் பந்தயம். இதில் 10 - 14 வயதினர் 160 சிசி பிரிவிலும், 12 - 16 வயதினர் 190சிசி பிரிவிலும் பங்கேற்க முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜேடன் தொடர்ச்சியாக 190சிசி பிரிவில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். தற்போது நடந்த 2025 FIM MiniGP ஜெர்மனி ரேஸில் உலக பட்டியலில் இருந்த வீரர்களை பின்னுக்கு தள்ளி 3ஆவது இடம் பிடித்துள்ளார். MiniGP ரேஸிங்கில் முதல் 3 இடத்தைப் பிடிக்கும் வீரர்களுக்கு, உலக அளவில் நடக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெர்மனியில் இதை பார்த்து வியந்த நடிகர் அஜித் அச்சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.




















