Transgender Marriage: அடுத்த இடி.. பாலின மாற்றம், திருநங்கையர் திருமணத்திற்கு தடை.. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு
ரஷ்யாவில் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர் திருமணங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர் திருமணங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
LGBTQ+ சமூகத்தினருக்கு எதிர்ப்பு:
LGBTQ+ சமூகத்தினருக்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் கடந்த 10 ஆண்டுகலாகவே பேசி வருகிறார். இந்த சமூகத்தினரால் பாரம்பரியமான குடும்பத்திற்கான மதிப்புகள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் புதிய சட்டம் ஒன்றில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்றத்தினிரு அவைகளிலும் ஒருமனதாக ஒப்புதல் பெறப்பட்ட இந்த புதிய சட்டம், இனி அந்த நாட்ல் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர்கள் திருமணம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கிறது.
புதிய கட்டுப்பாடுகள் என்ன?
புதிய சட்டத்தின்படி, "ஒரு நபரின் பாலினத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையும்" தடை செய்யப்படுகிறது. அத்துடன் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொது பதிவுகளில் ஒருவரின் பாலினத்தை மாற்றுவதற்கும் தட விதிக்கப்பட்டுள்ளது. பிறவி முரண்பாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ தலையீட்டிற்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பாலினம் மாறிய நபர்கள் திருமணம் செய்து கொள்வது, மதபோதகர்களாக மாறுவது மற்றும் குழந்தைகள தத்தெடுப்பது ஆகிய செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீளும் கட்டுப்பாடுகள்:
சிறார்களிடையே பாரம்பரியமற்ற பாலியல் உறவுகளுக்கான பொது அங்ஜ்கீகாரத்தை தடை செய்யும் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஓர்னச்சேர்க்கையாளர் திருமணத்தை தடை செய்யும் சீர்திருத்தத்தை முன்வைத்தார். அதோடு கடந்த ஆண்டு பெரியோர்களிடையேயான மரபுக்கு மாறான பாலியல் உறவுகளுக்கும் தட விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
எம்.பிக்கள் கருத்து:
நாட்டின் பாரம்பரிய விழுமியங்கள" எனக் கருதும் கிரெம்ளினின் சிலுவைப் போரில் இருந்து இந்த தடை உருவானது என்று சில ரஷ்ய எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். மேற்கத்திய குடும்ப எதிர்ப்பு சித்தாந்தத்தில் இருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும், பாலின மாற்றத்தை "தூய்மையான சாத்தானியம்" என்றும் சில எம்.பிக்கள் தெரிவிக்கின்றனர்.
குவியும் கண்டனங்கள்:
ரஷ்யா கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு LGBTQ+ சமூகத்தினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அனைத்து தனிநபர்களின் உரிமைகளை மதிப்பதும் பாதுகாப்பதும், அவர்களின் பாலின அடையாளம் அல்லது பாலியல் நிலையைப் பொருட்படுத்தாமல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவது அவசியம். பாலினத்தை உறுதிப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாலின அடையாளத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மறுப்பது திருநங்கைகளுக்கு கடுமையான உளவியல் மற்றும் உணர்ச்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்கள் சந்திக்கும் பாகுபாடு மற்றும் வன்முறையை புதிய சட்டம் அதிகப்படுத்தலாம்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், அரசாங்கங்கள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள LGBTQ உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து தனிநபர்களும் தங்கள் பாலின அடையாளம் அல்லது பாலியல் நிலையின் அடிப்படையில் கண்ணியமாகவும், பாகுபாடுகளுக்கு பயப்படாமலும் வாழ முடியும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.