Naked photoshoot: நான் போட்டோகிராஃபர்.. பிரபல மாடல் அழகியை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்த நபர் கைது!
மாடல் அழகி ஒருவரை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![Naked photoshoot: நான் போட்டோகிராஃபர்.. பிரபல மாடல் அழகியை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்த நபர் கைது! London: Pervert policeman filmed women Model naked using hidden cameras for fake photoshoot Naked photoshoot: நான் போட்டோகிராஃபர்.. பிரபல மாடல் அழகியை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்த நபர் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/f8370d80421351c101759be92bc82218_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகளவில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு குற்றச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரபல மாடல் அழகி ஒருவரை அவருக்கு தெரியாமலே நிர்வாணமாக ஒருவர் படம் எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் நகரைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிறிஸ்டி(29). இவர் தன்னுடைய 18 வயது முதல் மாடல் அழகியாக பல்வேறு விளம்பரங்கள் மற்றும் நாளிதழகள் ஆகியவற்றிற்கு போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் காவல்துறையினரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் கிறிஸ்டி தொடர்பான படங்கள் ஒருவரின் மொபைலில் சிக்கியுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். அத்துடன் அந்த நபர் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா என்றும் காவல்துறையினர் கிறிஸ்டியிடம் கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர் காவல்நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு காவலர்களிடம் சிக்கி இருந்த நபரை கிறிஸ்டி 2017ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். அந்த நபர் 2017ஆம் ஆண்டு கிறிஸ்டியை தொடர்பு கொண்டு ஒரு போட்டோ ஷூட் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக கிறிஸ்டி ஒரு பிரபல தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நபர் உண்மையான போட்டோகிராஃபர் போல் பேசியுள்ளார். இதை பார்த்த கிறிஸ்டி அவர் கூறிய படி உடைகளை மாற்றி போட்டோ ஷூட் செய்துள்ளார். அதற்கு பின்பு அந்த நபரிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. எனவே அந்த போட்டோ ஷூட் தொடர்பாக கிறிஸ்டி மறந்துள்ளார்.
தற்போது காவல்துறையினர் அழைத்தவுடன் அவருக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது. அந்த போட்டோ ஷூட்டின் போது கிறிஸ்டி கழிவறையில் உடை மாற்றும் போது அந்த நபர் மறைமுக கேமரா மூலம் அவரை நிர்வாணமாக படம் எடுத்துள்ளார். அத்துடன் கிறிஸ்டி உடை மாற்றும் வீடியோவையும் எடுத்துள்ளார். இவை அனைத்தும் கிறிஸ்டிக்கு தெரியாமல் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கிறிஸ்டியிடம் புகாரை பெற்று அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் இதேபோன்று 50 பெண்களுக்கு மேல் போலி போட்டோ ஷூட் என்று கூறி நிர்வாணமாக படம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையில் பார்க்க: பாலமேடு ஜல்லிக்கட்டு ஏபிபிநாடு யூடியூப் நேரலை !
மேலும் படிக்க: பறக்குறத சாப்பிடலாம்... மிதக்குறத சாப்பிடலாம்... மிதந்துட்டே சாப்பிடலாமா? 4 இடத்தில் இருக்காம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)