Unique Waterside Restaurants: பறக்குறத சாப்பிடலாம்... மிதக்குறத சாப்பிடலாம்... மிதந்துட்டே சாப்பிடலாமா? 4 இடத்தில் இருக்காம்!
உலகில் தண்ணீரில் ஒரு சில இடங்களில் சில ஓட்டல்கள் அமைந்துள்ளன. அவை எங்கே அமைந்துள்ளது தெரியுமா?
உலகில் பல்வேறு இடங்கள் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். ஒரு சில இடங்கள் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும். மற்றவை மனிதர்களால் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்தவகையில் உலகில் தண்ணீரில் ஒரு சில இடங்களில் சில ஓட்டல்கள் அமைந்துள்ளன அவை எங்கே அமைந்துள்ளது?
பிபிகியூ லாம்ப் கேமென்ஷா ஓட்டல்:
இந்த உணவு விடுதி மலேசியாவின் தேசிய உயிரியல் பூங்காவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த ஓட்டலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் உணவு சாப்பிட மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆற்று நீரில் அமர்ந்து கொண்டு நாம் உணவு சாப்பிடலாம். இது பல சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.
View this post on Instagram
அசைவ மீன் பண்ணை தாய் ஓட்டல்:
மலேசியாவின் செலன்கோர் பகுதியில் அமைந்துள்ள தாய்லாந்து உணவுகம் தான் இது. இந்த உணவகத்தில் இயற்கை உணவுகள் அதிகளவில் சமைக்கப்படுகிறது. அத்துடன் இந்த உணவுகத்தின் முக்கியமான ஸ்பெஷல் உணவாக தாய்லாந்து உணவு வகைகள் அமைந்துள்ளன. இந்த ஓட்டலும் மிதக்கும் நீரில் ஒரு கூடாரம் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓட்டல் 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
View this post on Instagram
இகன் பகார் ஶ்ரீ நிகட்:
மலேசியாவின் செலன்கோர் பகுதியில் அமைந்துள்ள மற்றும் ஒரு வித்தியாசமான உணவு விடுதி இது. இந்த விடுதி ஒரு ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏரியில் அதிகளவில் மீன்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உணவகம் ஆண்டு முழுவதும் பச்சை நிறத்தில் இயற்கை எழில் சூழ சிறப்பானதாக அமைந்திருக்கும். இங்கு அதிகளவில் மீன் சார்ந்த உணவு வகைகள் சமைக்கப்படுகிறது.
View this post on Instagram
ப்ளூ சோன் கஃபே:
மலேசிய தலைநகர் கொலாலம்பூரில் இந்த தாய்லாந்து உணவு வகை விடுதி அமைந்துள்ளது. இது ஏரிக்கறை ஓரம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி தண்ணீரில் கூடாரம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் இங்கு அமர்ந்து உணவு சாப்பிடும் போது நமது மனதிற்கு ஒருவகையான அமைதி ஏற்படும். இந்த உணவகத்திலும் தாய்லாந்து உணவு வகைகள் அதிகளவில் சமைக்கப்படுகிறது.