(Source: ECI/ABP News/ABP Majha)
School Girls Poisoned : ஆப்கானிஸ்தானில் இரு பள்ளிகளில், மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான வேலைகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருவேறு பள்ளிகளில், 1 முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் விஷம் வைத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி வெளியாகி உள்ள செய்தியில், மாணவிகளுக்கு விஷம் வைத்த சம்பவம் குறித்து அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும்போது, நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சார்-இ-புல் மாகாணத்தில் தாக்குதல்கள் நடந்தன.
சம்பவம் நடந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. இந்த இரு பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என கூறியுள்ளதாக தெரிகிறது
சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வி துறை விசாரணை நடத்தி உள்ளது. இதில், 3-வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிய வருகிறது என ரஹ்மானி கூறியுள்ளார். எனினும், மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. அண்டை நாடான ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவிகளை இலக்காக கொண்டு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதில், ஆயிரக்கணக்கான மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இருந்த போதிலும் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யாரென்ற விவரங்களை பற்றிய எந்தவித தகவலும் வெளிவரவில்லை.
மேலும் படிக்க