UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt Kumbh Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை, 4 மாதங்கள் ஆகியும் வழங்காத உத்தரபிரதேச அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

UP Govt Kumbh Stampede: மாநில அரசு தான் மக்களின் அறங்காவலர் என்று அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தை நாடிய கணவர்:
பீகாரைச் சேர்ந்த உதய் பிரதாப் சிங் என்பவரின் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி தனது மனைவி உயிரிழந்து 4 மாதங்களாகியும், உத்தரபிரதேச அரசு தற்போது வரை இழப்பீடு வழங்கவில்லை என அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், “ மனைவி கூட்ட நெரிசலில் இறந்தது குறித்து கணவருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், உடல் மனுதாரரின் மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடல் மருத்துவமனையில் இருந்து வந்ததா அல்லது நேரடியாகக் கொண்டு வரப்பட்டதா, அல்லது உரிமை கோரப்படாமல் கிடந்ததா என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உடல் பிணவறைக்கு வெளியே ஒப்படைக்கப்பட்டது, ஆனால் பிரேத பரிசோதனை செய்ததற்கான எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை” என உத்தரபிரதேச அரசை நீதிமன்றம் கடுமையாக சாடினர்.
அரசின் முடிவு என்ன?
மேலும், ”விரும்பத்தகாத சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், அது அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயனளித்து இழப்பீடு வழங்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்து பதிலளிக்குமாறு உத்தரபிரதேச அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு?
கும்பமேளாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்பாக பிபிசி இந்தி நாளிதழ் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஜனவரி 29ம் தேதியன்று கும்பமேளாவில் ஏற்பட்ட 4 கூட்ட நெரிசல் நிகழ்வுகளில் 82 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம், ஆனால் அரசு தரப்பில் பலி எண்ணிக்கை 37 என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்த பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதுபோக மேலும் குறைந்தது 26 குடும்பங்களுக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
तथ्य बनाम सत्य : 37 बनाम 82
— Akhilesh Yadav (@yadavakhilesh) June 10, 2025
सब देखें, सुनें, जानें-समझें और साझा करें। सत्य की केवल पड़ताल नहीं, उसका प्रसार भी उतना ही ज़रूरी होता है।
भाजपा आत्म-मंथन करे और भाजपाई भी और साथ ही उनके समर्थक भी कि जो लोग किसी की मृत्यु के लिए झूठ बोल सकते हैं, वो झूठ के किस पाताल-पर्वत पर चढ़कर… pic.twitter.com/7vMg0o8kEo
கட்டாய கையொப்பம்:
மாறாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பலியானதாக குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் கையொப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 19 குடும்பத்தினருக்கு தற்போது வரை எந்தவித நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இதுபோக கும்பமேளாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 37 பேரின் விவரங்களை உத்தரபிரதேச அரசு தற்போது வரை வெளியிடவில்லை.” என பிசிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் விமர்சனம்:
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பேசுகையில், “உத்தரபிரதேச அரசு இறப்பு எண்ணிக்கை குறித்து பொய் சொல்கிறது. தவறான புள்ளிவிவரங்களை வழங்குபவர்கள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள் அல்ல” என்றார். மேலும் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இழப்பீடு ஏன் ரொக்கமாக வழங்கப்பட்டது? பணம் எங்கிருந்து வந்தது? விநியோகிக்கப்படாத பணம் எங்கே போனது? எந்த விதியின் கீழ் பண விநியோகம் அங்கீகரிக்கப்பட்டது? ரொக்கப் பணம் செலுத்துவதற்கு யார் அங்கீகாரம் அளித்தனர்? பணம் செலுத்துவதற்கு ஆதரவாக ஏதேனும் எழுத்துப்பூர்வ உத்தரவு உள்ளதா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, மாநில அரசுகளுக்கான ரோல் மாடலாக திகழ்வதாக மோடி கூறியிருந்த நிலையில், இதுதான் அந்த ரோல் மாடலா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.





















