மேலும் அறிய

villupuram: "விலை உங்கள் விருப்பம்" - இலவசமாக உணவு வழங்கி வரும் பட்டதாரி இளைஞர்கள்

"அன்பை பரிமாறுவோம்" "உணவின் விலை உங்கள் விருப்பம்" இலவசமாக உணவு வழங்கி வரும் பட்டதாரி இளைஞர்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கம் பகுதியில் திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் பூவரசன் பட்டதாரி இளைஞரான இவர் "மனிதநேயம்" என்கின்ற பெயரில் உணவு வழங்கி வருகிறார்.

இவர் கடையில் வைத்துள்ள பதாகையில் அன்பை பரிமாறுவோம்” எனவும், உணவின் விலை உங்கள் விருப்பம் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். காலையில் இட்லி மற்றும் பொங்கல் போன்றவற்றை வழங்கிவருகிறார். மதிய வேளையில் லெமன், சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என மூன்று வகையான உணவு வழங்கி வருகிறார். இங்கு அதிகாலையில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் வந்து உணவருந்தி விட்டு செல்கின்றனர். மேலும் "உணவின் விலை உங்கள் விருப்பம்" என்பதால் சாப்பிட்டு முடித்தவுடன் அருகில் வைத்துள்ள ஒரு பெட்டியில் அவர்களால் முடிந்த தொகையை அதில் செலுத்தி விட்டு செல்கின்றனர்.

villupuram:

இது தொடர்பாக பூவரசன் கூறுகையில்...

"நான் தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளேன். கொரோனா  காலகட்டத்தில் பலர் உணவின்றி தவித்து வந்த நிலையில் நானும் வறுமையில் இருந்தேன். இதனால் இதுபோன்ற நிலை வரக் கூடாது எனவும் “பசி இல்லா தமிழகம்” ஆக இருக்க வேண்டும் என நினைத்து தற்பொழுது இப்பணியில் ஈடுபட்டு உள்ளேன். தினமும் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து நானும் என் தாயும் சேர்ந்து காலை உணவாக இட்லி மற்றும் பொங்கல் போன்றவற்றை தயார் செய்து ஏழு முப்பது மணி அளவில் கடையில் வைத்து விடுவோம்.

villupuram:

பின்னர் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பெரியவர்கள் வரை எங்கு உணவு அருந்திவிட்டு தங்களால் இயன்ற பணத்தை அங்கு உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்வார்கள். மேலும் மதிய வேளையில் தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் என மூன்று வகையான உணவை மதிய வேளையில் வழங்கிவருகிறார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1500 முதல் 2000 வரை செல்வதாகவும் தெரிவித்தார். வேலை முடிந்த பிறகு இரவு நேரத்தில் பகுதி நேர வேலைக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தார்.

villupuram:

தற்போதும் கூட பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் உணவுக்காக கையேந்தும் நிலை உள்ளது இந்த நிலையை மாற்றவே என்னால் முயன்ற ஒரு முயற்சியாக இதனை முன்னெடுத்து நடத்தி வருகிறேன் என பெருமையுடன் தெரிவித்தார் பூவரசன். மேலும் பூவரசனின் இத்தகைய செயல் பொதுமக்களிடையே தற்போது மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget