(Source: ECI/ABP News/ABP Majha)
Fire Accident: திடீரென தீ பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்... மருத்துவமனையிலே பயங்கரம்.. திண்டிவனத்தில் பரபரப்பு..!
மரக்காணம் அருகே மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்: மரக்காணம் அருகே மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது இதைக் கண்ட பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.
அப்போது ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அதிக சத்துத்துடன் வெடித்து, தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மரக்காணம் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதுமாக தீயில் கருகி சாம்பல் ஆனது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
முதற்கட்ட விசாரணையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இன்று சர்வீஸ் முடிந்து மருத்துவமனையில் நிறுத்தி வைக்கும் பொழுது ரிவர்ஸ் கியரில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் டேஞ்சர் லைட் செல்லும் ஒயரில் மின்சாரம் சென்று கொண்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
திண்டிவனம் நகராட்சியில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு - காரணம் என்ன..?
தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 20% கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்
ஆய்வுக்கு வருவதை கண்டு உணவகத்தை மூடிய உரிமையாளர்; சுவர் எகிறிகுதித்து ஆய்வு செய்த அதிகாரிகள்