கணவருக்கு கிட்னி பெயிலியர்.. பச்சிளம் பெண் குழந்தையை பக்கட்டில் முக்கி கொன்ற கொடூர தாய்!
தமிழ்நாட்டை சேர்ந்த பெண், தனது இரண்டு வார பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண் ஒருவர், தனது இரண்டு வார பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
தமிழ்நாட்டு பெண் கொடூரம்:
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் ஆரோக்கிய விஜயா. இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர். கட்டேடன் தொழில்துறை பகுதியில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஏற்கனவே ஒரு வயது மகன் உள்ளதாலும், தனது கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாலும், புதிதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்ற கவலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி, குளிப்பதற்காக சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்க்கும்போது, தனது குழந்தையைக் காணவில்லை என விஜயா கூறி இருக்கிறார். குழந்தையை தேடியதாகவும், ஒரு வாளி தண்ணீரில் குழந்தையைக் கண்டதாகவும் அவர் கூறினார். தனது கணவருக்கு போன் செய்து, தங்கள் குழந்தையை யாரோ நீரில் மூழ்கடித்து கொன்றதாகக் கூறியுள்ளார்.
பக்கட்டில் மூழ்கி துடிதுடித்து இறந்த பச்சிளம் குழந்தை:
முடலை மணி என்ற அவரது கணவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் அந்தப் பெண்ணை விசாரித்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் நரேந்தர் கூறுகையில், "தகவலின் கிடைத்து, மைலார்தேவ்பள்ளி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கியது.
இருப்பினும், அந்தப் பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அந்தப் பெண் மனம் உடைந்து, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனது நிதி நெருக்கடி காரணமாக தனது குழந்தையைக் கொன்றதாகக் கூறினார். ஆரோக்கிய விஜயா நேற்று கைது செய்யப்பட்டு, போலீஸ் ரிமாண்டில் வைக்கப்பட்டார்" என்றார்.
இதையும் படிக்க: IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?

