மேலும் அறிய

IPL 2025 CSK vs RCB: டாஸ் வென்றார் ருதுராஜ்! சென்னைக்கு எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்குமா பெங்களூர்?

IPL 2025 CSK vs RCB: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த சீசனின் 8வது போட்டியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

சென்னை பவுலிங், பெங்களூர் பேட்டிங்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணிக்காக தோனியும், பெங்களூர் அணிக்காக கோலியும் களமிறங்குவதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ஜாம்பவான்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு பிறகு எதிரெதிராக ஆடும் போட்டி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த போட்டியில் சேசிங்கைத் தேர்வு செய்து வெற்றி பெற்ற சென்னை அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற சேசிங்கையே தேர்வு செய்துள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆர்சிபி அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

2008ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்திற்கு ஆர்சிபி அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

ப்ளேயிங் லெவன்:

சென்னை அணியில் ருதுராஜ் தலைமையில் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா, சாம் கரண், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, பதிரானா. கலீல் அகமது களமிறங்கியுள்ளனர். 

பெங்களூர் அணியில் விராட்கோலி, பில் சால்ட், படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யஷ் தயாள் களமிறங்கியுள்ளனர். 

சென்னை அணியில் இம்பேக்ட் வீரராக ஷிவம் துபே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியில் கடந்த போட்டியில் படிக்கல் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். இந்த போட்டியில் சுவப்னில் சிங் அல்லது ஷெப்பர்ட் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சுழல் ஆதிக்கமா?

சொந்த மைதானத்தில் ஆடும் சென்னை அணிக்கு அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது சுழல் அஸ்திரமாக உள்ளனர். கலீல் அகமது,  பதிரானா வேகத்தில் களமிறங்கியுள்ளனர். இவர்களை திறம்பட சமாளித்தால் நிச்சயம் ஆர்சிபி இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம். 

அதேபோல, ருதுராஜ், ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, தோனி, ஜடேஜா போன்ற நீண்ட பேட்டிங் ஆர்டர் கொண்ட சென்னை அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யஷ் தயாள், குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget