மேலும் அறிய
Advertisement
திருச்சியில் மாணவர்களுக்கு போதைமாத்திரை விற்பனை - 4 பேர் கைது
திருச்சியில் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஓ.சி.ஐ.டி. என்ற தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி மாநகரம், திருச்சி மத்திய மண்டலத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து இருந்தது. இவற்றை கட்டுபடுத்த காவல்துறையினர் தனிப் படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பல லட்சம் மதிப்பிலான கஞ்சா, மாத்திரை உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் இன்னும் போதைப்பொருள் விற்பனை குறை,யவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாக திருச்சியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒ.சி.ஐ.டி. தனிப் படையினர் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு வாலிபர்கள் சில நின்று கொண்டு கல்லூரி மாணவரிடம் போதை மாத்திரை விநியோகம் செய்வதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். இதைடுத்து அந்த கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், போதை மாத்திரை வெளியூரில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், விற்க இருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் உதவியுடன் அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளை விற்கும் முயற்சியில் இந்த கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம். இதையடுத்து அந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சென்ற பிறகுதான் போதை மாத்திரையை கும்பல் மாணவரிடம் கொடுப்பார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion