மேலும் அறிய

பெண்ணை மிரட்டி நகை பறித்த வழக்கு: தனிமை சிறை, சிறையில் பணி....2 வாலிபர்களுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இவர் விராலிமலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் இரவு பணி முடிந்து சாலையில் நடந்து செல்லும் போது கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, கொலுசு, செல்போன்களை மர்மநபர்கள் 3 பேர் பறித்து சென்றனர். மேலும் இதனை வெளியில் சொல்லக்கூடாது என கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுதொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன் (22), நந்தகுமார் (22), மணிகண்டம் அருகே பூங்குடியை சேர்ந்த ஹேமராஜ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் முருகன், நந்தகுமாருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஹேமராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

பெண்ணை மிரட்டி நகை பறித்த வழக்கு: தனிமை சிறை,  சிறையில் பணி....2 வாலிபர்களுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் கொடுத்த தண்டனை

இந்த தீர்ப்பில் அபராத தொகை ரூ.15 லட்சத்தை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை 3 பேரும் சிறையில் பணி செய்து, அந்த பணியில் 20 சதவீதம் என ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து தீர்ப்பில் மேலும் 3 பேரையும் தனித்தனியாக தனிமை சிறையில் 3 மாதம் அடைக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் தனிமை சிறையில் இருக்க வேண்டும் எனவும், இந்த தண்டனையை 18 மாதத்திற்குள் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர்  பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
TN Weather Update: ஊருக்குள் புகுந்த டிட்வாவின் மிச்சம்.. சென்னை, காஞ்சியை தாண்டி.. 2 நாட்களுக்கு கனமழை - வானிலை அப்டேட்
TN Weather Update: ஊருக்குள் புகுந்த டிட்வாவின் மிச்சம்.. சென்னை, காஞ்சியை தாண்டி.. 2 நாட்களுக்கு கனமழை - வானிலை அப்டேட்
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
TN Weather Update: ஊருக்குள் புகுந்த டிட்வாவின் மிச்சம்.. சென்னை, காஞ்சியை தாண்டி.. 2 நாட்களுக்கு கனமழை - வானிலை அப்டேட்
TN Weather Update: ஊருக்குள் புகுந்த டிட்வாவின் மிச்சம்.. சென்னை, காஞ்சியை தாண்டி.. 2 நாட்களுக்கு கனமழை - வானிலை அப்டேட்
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Maruti eVitara: முதல் EV கார்னா சும்மாவா.. யூரோப்பியன் டச்,மொத்த வித்தையையும் இறக்கிய மாருதி - விலையிலும் ட்விஸ்ட்
Maruti eVitara: முதல் EV கார்னா சும்மாவா.. யூரோப்பியன் டச்,மொத்த வித்தையையும் இறக்கிய மாருதி - விலையிலும் ட்விஸ்ட்
Tiruvannamalai Karthigai Deepam 2025: பரணி தீபம் ஏற்றி வழிபாடு! ஏகன் அனேகன் தத்துவம் உணர்த்தும் அதிசயம்!
Tiruvannamalai Karthigai Deepam 2025: பரணி தீபம் ஏற்றி வழிபாடு! ஏகன் அனேகன் தத்துவம் உணர்த்தும் அதிசயம்!
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Embed widget