மேலும் அறிய

தீபாவளி பண்டிகை - திருச்சியில் 13 இடங்களில் தீ விபத்து

திருச்சியில் பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது, ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். மேலும் புதுமண தம்பதிகள் தலைதீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். தீபாவளியான இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது. 

மேலும், தீபாவளி பண்டிக்கையின் போது, மக்களுக்கு தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.  தீபாவளி பண்டிகையொட்டி, விபத்து ஏற்படாத வகையில், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், எரிவாயு உருளை இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பாக எளிதில் தீ பற்றகூடிய பொருட்கள் அருகே வெடியை வெடிக்க கூடாது. பாதுக்காப்பு விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிக்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் என தெரிவிக்கபட்டது. 

தீபாவளி பண்டிகை -  திருச்சியில் 13 இடங்களில் தீ விபத்து

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர், சத்திரம் பேருந்து நிலையம், காஜாபேட்டை ஆகிய ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக திருச்சியில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டது. ராக்கெட் பட்டாசு விட்டதினால் ராஜாகாலனி, கே.கே.நகர், அம்மையப்ப நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பந்தல் போட வைத்திருந்த கீற்றுகள் பட்டாசு பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. சோழராஜபுரம் பகுதியில் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்து நாசமானது. கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பால்பண்ணை மகாலட்சுமி நகர் பகுதியில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல ஸ்ரீரங்கம் பகுதியில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கீதாபுரம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் பட்டாசு காரணமாக 3 இடங்களில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் ராவேந்திரா அபார் மெண்டில் பால்கனியில் வைத்திருந்த துணிகள் பட்டாசு தீப்பொறியின் காரணமாக எரிந்தது. இதனை ஸ்ரீரங்கம் தீய ணைப்பு துறையினர் அணைத்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget