மாதம்பட்டியின் குட்டி ராஜா.. பரம்பரை சொத்தை இழந்த நடிகர்.. வேதனையில் இருக்கும் உறவினர்கள்
பிரபல காமெடி நடிகர் ஒருவர் பரம்பரை சொத்தை இழந்த நிலையில் சென்னையில் குடியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், அஜித் படங்களில் காமெடியனாக நடித்த சத்யன் தனது சொதுக்களான 500 ஏக்கர் நிலம், அரண்மனை போன்ற வீடு என அனைத்தையும் விற்றுவிட்டு சென்னையில் குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சத்யராஜின் சொந்தக்காரரான சத்யன், மாதம்பட்டியில் குட்டி ராஜா என அனைவராலும் அழைக்கப்படுபவர் இன்று அவரது பரிதாபத்துக்குரிய நிலையை கண்டு அப்பகுதி மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த நடிகர்
வேட்டைக்காரன், நண்பன், துப்பாக்கி, மெர்சல், போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் சத்யன்.
மாதம்பட்டியில் பிறந்த சத்யன் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். அரண்மனை போன்ற வீடு, . 500 ஏக்கர் நிலம், 500 கோடிக்கு சொந்தக்காரர் என்றும் கூறப்படுகிறது. சத்யனுக்கு தனது சிறு வயதில் இருந்தே நடிப்பில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது அப்பா சிவக்குமார் சத்யனை ஹீரோவாக வைத்து இரண்டு படங்களை தயாரித்துள்ளார். இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் சத்யன். ஆனால். இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்பரத்தன.
காமெடியில் கலக்கிய சத்யன்
ஹீரோவாக நடித்த படங்கள் ஓடாவிட்டாலும் காமெடி ரூட்டுக்கு மாறிய சத்யன் ஆரம்பகாலகட்டத்தில், தனுஷ், விஷால், பரத் ஆகியோரின் படங்களில் காமெடியனாக நடித்தார். குறிப்பாக சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி, விஜய்யுடன் நண்பன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பும் காமெடியும் பெரிய அளவில் பேசப்பட்டன. அஜித்துடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முழு நேர காமெடி நடிகராகவும் சத்யன் மாறிவிட்டார்.
சொத்தை இழந்த சத்யன்
சத்யனை வைத்து தயாரித்த 2 படங்களுமே பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் அதனை சரிக்கட்ட அவரது அப்பா பரம்பரை சொத்தை விற்று சரி செய்துள்ளார். மேலும், பல சொத்துகள் கைவிட்டு போனதாகவும் கூறப்படுகிறது. மேலும், மீதம் இருந்த சொத்துக்களை விற்று விட்டு நடிகர் சத்யன் சென்னையில் குடியேறி இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. அதனோடு, மாதம்பட்டியில் இருக்கும் அவரது சொந்தக்காரர்கள் சிலர் சத்யன் சொத்துக்கள் விற்ற விவரத்தையும் தெரிவித்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சினிமாத்துறையை சேர்ந்த பலரும் அவரிடம் போனில் அழைத்து நலம் விசாரிக்கின்றனராம். ஜமீன்தாரர் ஆன சத்யன் தற்போது கடினமான சூழலை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.






















