தீவிரவாதிகளை சுட்டிக்காட்டிய ராணுவ நாய் வீர மரணம் - ராணுவ மரியாதையுடன் அஞ்சலி
India Salutes: ஞாயிற்றுக்கிழமை பட்டனில் ஆக்ஸலுக்கு ராணுவ மரியாதையுடன் புனிதமான இராணுவ சேவை வழங்கப்பட்டது. தீவிர தாக்குதலால் உயிர் தியாகம் செய்த வீர நாய்க்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tribute to Dog Axel: நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ஆக்ஸல் - ராணுவ மரியாதையுடன் அஞ்சலி
பல ஆண்டுகாலமாக நாய்களை குறிப்பாக மோப்ப சக்தி அதிகம் உள்ள நாய்களை ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது என்பது ஒரு பொதுவான விஷயம். நாய்கள் மனிதர்களை விடவும் புத்தி கூர்மை அதிகம் உள்ளவை. ராணுவ வீரர்கள் செல்ல முடியாத இடத்திற்கு செல்லவும், கண்காணிக்கவும், ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மோப்ப நாய்களை பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாய்களுக்கு ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் கற்று கொடுக்கப்படும். அவைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியானது மிகவும் வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட்டு வருகிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத தாக்குதல் :
இது போன்ற பல முக்கிய பங்கு வகிக்கும் ராணுவ நாய்கள் சில சமயங்களில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாவதும் உண்டு. அது போன்ற ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு ஜூலை 31, 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டனில் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது இந்திய ராணுவ நாய் ஆக்ஸல் வீர மரணம் அடைந்தது. அதன் அபாரமான மோப்பசக்தியால் பயங்கரவாதியின் இருப்பிடத்தை துல்லியமாக சுட்டி காட்டியது. அதன் துணிச்சலான செயலால் அருகில் இருந்த மசூதி பாதுகாக்கப்பட்டது. பாரமுல்லா மாவட்டத்தில் ஜிஹாட்டி தீவிரவாதிகள் மீது தொடர்ந்து எட்டு மணி நேரம் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினரால் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். என்கவுண்டர் செய்யப்பட்ட போது ஒரு ராணுவ ஜவான் மற்றும் ஒரு போலீஸ்காரர் காயங்களுக்குதான் உயிர் தப்பினர். அதற்கு பிறகு கேமராவுடன் இணைக்கப்பட்ட ஆக்ஸல் அடுத்த நடவடிக்கை எடுத்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் தீவிரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டது. அதன் மீது மூன்று குண்டுகள் பாய்ந்தன.
ஆக்ஸலுக்கு ராணுவ மரியாதை:
ஞாயிற்றுக்கிழமை பட்டனில் ஆக்ஸலுக்கு ராணுவ மரியாதையுடன் புனிதமான இராணுவ சேவை வழங்கப்பட்டது. தீவிர தாக்குதலால் உயிர் தியாகம் செய்த வீர நாய்க்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேஜர் ஜெனரல் அஞ்சலி :
கிலோ ஃபோர்ஸின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் (ஜிஓசி) மேஜர் ஜெனரல் எஸ் எஸ் ஸ்லாரியா, ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலால் வீர மரணம் அடைந்த ராணுவ நாய் ஆக்ஸலுக்கு இறுதி சடங்கின் போது மரியாதை செலுத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆக்ஸலுக்கு பாதுகாவலராக, பயிற்சியாளராக அதற்கும் மேல் ஒரு நல்ல நண்பராக இருந்த அதன் ட்ரைனருக்கு இந்த நிகழ்வு ஒரு உணர்ச்சகரமான தருணம்.