Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ

உலக அழகி போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த மாடலான ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ வென்று வெற்றி வாகை சூடினார். இனி உலகத்தின் அழகி தாய்லாந்து நாட்டின் இந்த மங்கைதான். இந்தியாவில் அதுவும் நமக்கு அருகே இருக்கும் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அழகிகள் யாரும் முதல் 10 இடங்களை கூட பிடிக்கவில்லையென்பது சோகம்தான் என்றாலும், யாது ஊரே யாவரும் கேளீர் என்பதற்கினங்க, எல்லோரும் விரும்பும் தாய்லாந்து நாட்டின் மங்கை முதலிடம் பிடித்து, உலக அழகியாக பட்டம் பெறுவதை இந்தியர்கள் பலரும் வாழ்த்தி, பாராட்டி வருகின்றனர்.
இரண்டு மற்றும் மூன்றாம் இடம் யாருக்கு தெரியுமா ?
இந்த போட்டியில் எத்தியோப்பியாவை சேர்ந்த அழகி 2வது இடத்தையும் போலந்து அழகி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால், இந்திய அழகியான எல்லோரின் மனம் கவர்ந்தவராக இருக்கக் கூடிய நந்தினி குப்தா முதல் எட்டு இடங்களை கூட பிடிக்க முடியவில்லை. இந்த போட்டி இந்தியாவில் நடைபெற்றும் இந்திய அழையான நந்தினி குப்தா பின்னடைவை சந்தித்தது இந்தியர்கள் பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நந்தினி குப்தாவிற்கான ரசிகர் பட்டாளமும் அவரின் அழகை ஆராதிப்பவர்களும் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















