திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த குழந்தை திருமணங்கள் - 5 பேர் மீது வழக்குப்பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
![திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த குழந்தை திருமணங்கள் - 5 பேர் மீது வழக்குப்பதிவு Tiruvannamalai Police case registered Social Welfare Department about the marriage of 2 schoolgirls - TNN திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த குழந்தை திருமணங்கள் - 5 பேர் மீது வழக்குப்பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/18/32b3eaae4a8aafb1c13ff541f823862f1721279374183113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். அய்யாவாடியைச் சேர்ந்த ஆட்டுப்பண்ணை உரிமையாளர் மனோகரன் மகன் அஜித் வயது (22). இவர் ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். அஜித் ஆடு மேய்க்கும் போது 15 வயது சிறுமியும் ஆடு மேய்க்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த மே மாதம் 31-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மாணவியின் கழுத்தில் தாலி இருந்ததை பள்ளி ஆசிரியர்கள் கவனித்தனர். பின்னர் மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அனுக்காவூர் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் காவேரி விசாரணை மேற்கொண்டதில் திருமணம் செய்தது உண்மை என தெரிய வந்தது. இதனால் சமூக நலத்துறையினர் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியை திருமணம் செய்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்
இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நந்தியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் புருஷோத்தமன் வயது (30). நெல் அறுவடை இயந்திர உரிமையாளரான இவர், ஒரு கிராமத்தில் நெல் அறுவடை செய்ய சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி சிலமாதங்கள் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் காதலித்து வந்தது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் திருப்பதி கோயிலில் இருவரும் கடந்த பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தொலைபேசி மூலமாக புகார் வந்ததை தொடர்ந்து சமூக நலத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் செய்தது உறுதியானது. இதனை அடுத்து தெள்ளார் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் துணை ஆய்வாளர் சாந்தி பெண் மற்றும் மாப்பிளை குடும்பத்தையும் சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து திருமணம் ஆன மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)