P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் - ப.சிதம்பரம்

புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழி திட்டத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தர வேண்டியை நிதியை மத்திய அரசு விடுவிக்கும் என்று மத்திய கல்வித்துறை துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசியதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. திமுக தோழமை கட்சிகள் நாளை அக்கட்சி பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில் சென்னையில் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும் ?
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ள ப.சிதம்பரம், அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனம் தெரியாதவரா மத்திய அமைச்சர் – ப.சி. பளீர்
மேலும், அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது என்று பதிவு செய்துள்ள ப.சிதம்பரம், மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா? என்று கேட்டுள்ள சிதம்பரம், நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவர் எழுப்பியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்
— P. Chidambaram (@PChidambaram_IN) February 17, 2025
அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம்…
இறுதியாக, தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தமிழ்நாட்டு மக்களிடம் வலிறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

