மேலும் அறிய

3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!

”சட்­டத்தை சமஸ்­கி­ரு­தம் ஆக்­கு­வது. திட்­டத்­தின் பெயரை சமஸ்­கி­ரு­தம் ஆக்­கு­வது. இது­தான் அவர்­க­ளது திட்­டம். புதிய கல்­விக் கொள்­கையே சமஸ்­கி­ரு­தக் கல்­விக் கொள்­கை­தான்”

புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசியதற்கு தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து தர்மேந்திரபிரதான் திமிராக பேசினால் தமிழர்களின் குணம் என்னவென்பதை காட்ட வேண்டியிருக்கும் என்று அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைவிடுக்கும் வகையில் பதிவும் இட்டியிருக்கிறார். அதோடு, இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளோம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மும்மொழி கொள்கை கொண்ட புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை திமுகவும் தமிழ்நாடு அரசும் எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!

மும்மொழி கொள்கையை எதிர்க்க காரணம் இதுதான் – திமுக

சட்­டத்தை சமஸ்­கி­ரு­தம் ஆக்­கு­வது. திட்­டத்­தின் பெயரை சமஸ்­கி­ரு­தம் ஆக்­கு­வது. இது­தான் அவர்­க­ளது திட்­டம். புதிய கல்­விக் கொள்­கையே சமஸ்­கி­ரு­தக் கல்­விக் கொள்­கை­தான் என்று குறிப்பிட்டுள்ள திமுக, “இந்­தி­யச் செவ்­வி­யல் / செம்­மொ­ழி­க­ளின் முக்­கி­யத்­து­வம், தொடர்பு மற்­றும் அழ­கி­யல் போன்ற கார­ணி­கள் புறந்­தள்­ளப் பட்­டு­வி­டக் கூடாது. இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் எட்­டா­வது வரை­வில் குறிப்­பி­டப் பட்­டுள்­ள­தும் மற்­று­மொரு முக்­கி­ய­மான நவீன மொழி­யு­மான சமஸ்­கி­ரு­தம் - – ஒன்று கூட்­டப்­பட்ட கிரேக்க மற்­றும் லத்­தீன் மொழி­க­ளின் இலக்­கி­யங்­க­ளைக் காட்­டி­லும் செறிவு மிக்­க­தா­க­வும், கணி­தம், தத்­து­வம், இலக்­க­ணம், இசை, அர­சி­யல், மருத்­து­வம், கட்­டி­டக் கலை, உலோ­க­வி­யல், நாட­கம், கவிதை, கதை சொல்­லல் மற்­றும் பிற ( சமஸ்­கி­ருத ஞான மரபு என்­ற­றி­யப்­பட்ட) ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­க­ளாக பல்­வேறு மதங்­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளா­லும், மதச்­சார்­பு­டை­ய­வர்­க­ளா­லும் வாழ்­வின் பல­த­ரப்­பட்ட சமூ­கப் பொரு­ளா­தார மற்­றும் வாழ்­வி­யல் முறை­க­ளைச் சார்ந்த எழுத்­தா­ளர்­க­ளால் எழு­தப்­பட்ட ஏரா­ள­மான செல்­வங்­க­ளை­யும் உள்­ள­டக்கி உள்­ளது.

எனவே சமஸ்­கி­ரு­தம், மும்­மொ­ழிப் பாடத்­திட்­டத்­தின் ஒரு மொழி­யா­கப் பள்­ளிக் கல்­வித் திட்­டத்­தின் எல்லா நிலை­க­ளி­லும், கல்­லூ­ரி­க­ளி­லும் ஒரு முக்­கி­ய­மான வள­மூட்­டக் கூடிய விருப்­பப் பாட­மாக வழங்­கப்­ப­டும்.

இந்த மொழிச் சுவை­யு­ட­னும், அனு­ப­வப் பூர்­வ­மா­க­வும் மட்­டு­மல்­லா­மல் தற்­கா­லத்­திற்­குப் பொருந்­தும் வகை­யில் சமஸ்­கி­ருத ஞான மர­பு­க­ளின் வழி­யில் முக்­கி­ய­மாக ஒலிப்பு மற்­றும் உச்­ச­ரிப்பு முறை­க­ளின் மூல­மா­கக் கற்­பிக்­கப்­ப­டும். ஆரம்ப மற்­றும் இடை­நிலை சமஸ்­கி­ரு­தப் பாடப் புத்­த­கங்­கள் எளிய தர­மான சமஸ்­கி­ருத மொழி­யில் எழு­தப்­பட்டு, மாண­வர்­கள் உண்­மை­யி­லேயே அனு­ப­வித்­துக் கற்­கும் வண்­ணம் சமஸ்க்­ரித மொழி­யின் மூலமே கற்­பிக்­கப்­ப­டும்”

என்று புதிய கல்­விக் கொள்­கை­யில் இருக்­கிறது. இத­னால்­தான் அந்­தக் கொள்­கையை நாம் கடு­மை­யாக எதிர்க்­கி­றோம். என்று குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்

சமஸ்கிருதம் பற்றி முரசொலி தலையங்கம்

மேலும் , இன்று வெளியாகியுள்ள திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், சமஸ்கிருதத்தை மீண்டும் வளர்ப்பதையே மத்திய பாஜக தன்னுடைய நோக்கமாக கொண்டுள்ளது என்று குறிப்பிட்டு ” மக்­க­ளவை நட­வ­டிக்­கை­கள் சமஸ்­கி­ருத மொழி­யி­லும் உறுப்­பி­னர்­களுக்கு விளக்­கப்­ப­டும் என்று மக்­க­ள­வைத் தலை­வர் ஓம் பிர்லா சொல்லி இருக்­கி­றார். யாருக்­குப் புரி­யும், எத்­தனை பேர் அறி­வார்­கள் என்­ப­தை­யும் அவர் சொல்லி இருந்­தால் பாராட்­ட­லாம். அதையே சமஸ்­கி­ரு­தத்­தில் சொல்லி இருந்­தால் பாராட்டு விழா கூட ஓம் பிர்­லா­வுக்கு எடுக்­க­லாம்.

மக்­க­ள­வை­யில் கடந்த பிப்­ர­வரி 11 ஆம் தேதி­யன்று கேள்வி நேரம் முடிந்த உடன் மக்­க­ள­வைத் தலை­வர் ஓம் பிர்லா ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டார். “மக்­க­ளவை நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் போது, அதன் மொழி­பெ­யர்ப்­பு­கள் உட­னுக்­கு­டன் பல்­வேறு மொழி­க­ளில் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. அந்த மொழி­க­ளின் பட்­டி­ய­லில், டோக்ரி, போட்டோ, மைதிலி, மணிப்­பூரி, சமஸ்­கி­ரு­தம், உருது ஆகிய ஆறு மொழி­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. இதன்­மூ­லம், இந்த மொழி­கள் மூல­மும் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒரே நேரத்­தில் விளக்­கம் கிடைக்­கும்” என தெரி­வித்­தார். இதற்கு உட­ன­டி­யாக தி.மு.க. சார்­பில் தான் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

மக்­க­ளவை மொழி­க­ளின் பட்­டி­ய­லில் சமஸ்­கி­ரு­தம் இருப்­ப­தற்கு முன்­னாள் அமைச்­ச­ரும், தி.மு.க. உறுப்­பி­ன­ரு­மான தயா­நிதி மாறன் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தார். இது தொடர்­பாக பேசிய அவர், “எந்த மாநி­லத்­தின் அலு­வல் மொழி­யாக சமஸ்­கி­ரு­தம் இருக்­கி­றது என்று சொல்ல முடி­யுமா? அந்த மொழி தொடர்பு கொள்ள முடி­யாத நிலை­யில் உள்­ளது. 2011 ஆம் ஆண்டு மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி, 73,000 பேர் மட்­டுமே சமஸ்­கி­ரு­தம் பேசு­கி­றார்­கள். உங்­கள் ஆர்.எஸ்.எஸ். சித்­தாந்­தத்­தால் வரி செலுத்­து­வோ­ரின் பணத்தை ஏன் வீண­டிக்­கி­றீர்­கள்?” என்று கேள்வி எழுப்­பி­னார். இப்­படி ஒரு எதிர்­வி­னையை ஓம் பிர்லா எதிர்­பார்க்­க­வில்லை.

சமஸ்­கி­ரு­தம் லட்­சக்­க­ணக்­கா­ன­வர்­க­ளால் பேசப் படு­கி­றது என்றோ, இந்த அவை­யில் இருக்­கும் பத்­துப் பேருக்கு சமஸ்­கி­ரு­தம்­தான் தெரி­யும் என்றோ, மூன்று மாநி­லங்­க­ளில் அது ஆட்சி மொழி­யாக இருக்­கி­றது என்றோ ஓம் பிர்லா சொல்லி இருக்க வேண்­டும். அதை விட்டு விட்டு கற்­ப­னை­யான காட்­சி­களை விவ­ரிக்­கி­றார் அவர்.

“நீங்­கள் எந்த நாட்­டில் வசிக்­கி­றீர்­கள்? இது பார­தம். பார­தத்­தின் மூல மொழி எப்­போ­தும் சமஸ்­கி­ரு­தம்­தான். அத­னால்­தான், சமஸ்­கி­ரு­தம் மட்­டு­மல்ல, 22 மொழி­க­ளை­யும் குறிப்­பிட்­டோம். சமஸ்­கி­ரு­தத்­திற்கு மட்­டும் ஏன் ஆட்­சே­ப­னை­களை எழுப்­பி­னீர்­கள்? இந்­தி­யா­வில் 22 மொழி­கள் நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. சமஸ்­கி­ரு­தம் மற்­றும் இந்தி உட்­பட அந்த 22 மொழி­க­ளில் ஏதே­னும் ஒன்­றில் விவா­தங்­கள் நடை­பெ­றும்.” என்று கூறி இருக்­கி­றார் ஓம் பிர்லா

பார­தத்­தின் மூல மொழி என்று ஓம் பிர்லா எப்­ப­டிச் சொல்­கி­றார்? எந்த ஆய்­வின் அடிப்­ப­டை­யில் சொல்­கி­றார்? அப்­படி உல­கம் ஏதா­வது ஒப்­புக் கொண்­டி­ருக்­கி­றதா?

ஆர்.எஸ்.எஸ்.வாதி­க­ளின் மூலத்­தத்­து­வம் சமஸ்­கி­ரு­தம் என்று சொல்­லுங்­கள். ஒப்­புக் கொள்­கி­றோம். இந்­திய நாட்டை சமஸ்­கி­ருத மயம் ஆக்­கப் போகி­றோம் என்று சொல்­லுங்­கள். உங்­கள் நோக்­கத்தை வெளிப்­ப­டை­யாக விமர்­சிக்­கத் தயா­ராக இருக்­கி­றோம். ஆனால் பாரத நாட்­டின் மூல மொழி சமஸ்­கி­ரு­தம் என்­பது உல­கம் ஒப்­புக் கொண்ட உண்மை அல்ல.

சனா­தன சக்­தி­கள் தங்­க­ளது நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்கு சமஸ்­கி­ரு­தத்தை மூல­மா­கப் பயன்­ப­டுத்­து­கின்­றன. ஜாதி­யால் வர்­ணத்­தால் பிரிக்­கப்­பட்­டுள்­ளார்­கள் மக்­கள் என்­ப­தற்கு மூல­மாக சமஸ்­கி­ரு­தம் இருக்­க­லாம். கோடிக்­க­ணக்­கான மக்­களை சூத்­தி­ரர்­க­ளாக, பஞ்­ச­மர்­க­ளாக ஆக்­கி­ய­தற்கு மூல­மாக இருப்­பது சமஸ்­கி­ரு­தம்­தான். சமூ­கத்­தின் சரி பாதி­யான பெண்­களை உரி­மை­யற்ற பது­மை­க­ளாக ஆக்­கு­வது சமஸ்­கி­ருத சூத்­தி­ரங்­கள்­தான். கட­வு­ளுக்கு உகந்த மொழி­யாக சமஸ்­கி­ருத்தை உரு­வ­கம் செய்து, மற்ற மொழி­களை தாழ்த்­தி­யது இந்த மேலா­திக்­கம்­தான். எனவே பிரி­வி­னை­யின் மூலம் ‘சமஸ்­கி­ரு­தம்’ என்று சொல்­ல­லாம். இந்­தி­யா­வின் மூல­மா­கச் சொல்ல முடி­யாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget