இதோ அதிரடி விலையில் ஆவின் பால்! 80 நாள் வரை கெட்டு போகாது - அடித்து சொல்லும் நிறுவனம்!
பொதுமக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் UHT TM Milk - 450 ml ரூ.28/-க்கும், UHT, TM Milk -150 ml ரூ.10/-க்கும் வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டு கொண்டு உள்ளது.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க போறீங்களா மீனவர்களே- இதோ அதிரடி விலையில் ஆவினின் சமன்படுத்தப்பட்ட UHT பால் குறைந்த விலையில் 80 நாள் வரை கெட்டு போகாது. அடித்து சொல்லும் ஆவின்-அசத்தும் ஆவின்- சமன்படுத்தப்பட்ட பாலுக்கு ரூ 2 தள்ளுபடி.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினமும் 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கு மேல் நுகர்வோர்களை கொண்ட ஆவின் நிறுவனம் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமாக தெரிகிறது. இந்த பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, பல வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 150க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சமன்படுத்தப்பட்ட பால் விற்பனை
குறிப்பாக பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா), மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பால் டிலைட் பால் (பர்ப்பிள்) போன்ற பால் வகைகளை அறிமுகப்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 33 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.
அதிக நாட்கள் பயன்படுத்தும் UHT முறை பால் அதிரடி விலையில்
மேலும் ஆவின் நிறுவனம் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் UHT முறையில் தயார் செய்யப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் (UHT TM Milk) 450ml மற்றும் 150ml அளவுகளில் பின்வரும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆவின் UHT சமன்படுத்தப்பட்ட பால் 450 மில்லி மற்றும் 150 மில்லி பாக்கி தள்ளுபடி விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது 450 மில்லி பால் ரூ 30 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ 2 குறைக்கப்பட்டு ரூ 28 க்கும் 150 மில்லி பால் ரூ 12ல் இருந்து ரூ 10 ஆகவும் குறைத்து தனியாருக்கு போட்டியாக அதிரடி காட்ட துவங்கி உள்ளது ஆவின்.
காய்ச்சாமல் அப்படியே பயன்படுத்த ஏற்ற பால்
இதில் பெரிய விசேசம் என்னன்னா ஆவின் நிறுவனத்தின் UHT சமன்படுத்தப்பட்ட பாலினை 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம். எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும். உணவகங்கள், பழச்சாறு கடைகள், விடுதிகள், சமையல் வல்லுநர்கள், தொழில் முனைவோர், மலைப்பிரதேசங்களில் வசிப்போர் மற்றும் மீனவர்கள் இப்பாலை காய்ச்சாமல் அப்படியே உபயோகிக்க ஏற்றது.
எனவே பொதுமக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் UHT TM Milk - 450 ml ரூ.28/-க்கும், UHT, TM Milk -150 ml ரூ.10/-க்கும் வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டு கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.