மேலும் அறிய
Soorasamharam 2024: திருச்செந்தூரின் கடலோரத்தில் விண்ணைப்பிளந்த அரோகரா சத்தம்! - சூரசம்ஹார புகைப்படங்கள்!
Thiruchendur Murugan Temple Soorasamharam: முருகப்பெருமானின் புகழ்பாடும் முக்கிய வைபவங்களில் சூரசம்ஹாரமும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருச்செந்தூரில், பக்தர்களின் அரோகரா சத்தமானது விண்ணைப் பிளந்தது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
1/6

புராண காலத்தில் சூரபத்மன் அசுரன் வாழ்ந்து வந்தான். சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் சிவபெருமானிடம் சூரபத்மன், சாகாவரம் வேண்டும் என கேட்க அதற்கு சிவபெருமான் அப்படி ஒரு வரத்தை கொடுக்க முடியாது என கூறவே, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருளி விட்டு செல்கிறார்.
2/6

சூரபத்மன் கிடைத்த வரத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யாமல், தேவர்களை அடிமைப்படுத்தி நடத்தி வந்தான்.இந்திரன் முதல் அனைத்து தேவர்களையும் சிறை பிடித்து சூரபத்மன் வெற்றி கொண்டான். வேறு வழி இல்லாமல் அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.
Published at : 07 Nov 2024 06:24 PM (IST)
மேலும் படிக்க





















