Crime : 10 ஆண்டுகள் வன்மம்... ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல்: தஞ்சை அருகே பயங்கரம்!
Crime : பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி குறுந்தையன் பைக்குடன் கீழே விழுந்துள்ளார்.

தஞ்சாவூர்: பழிக்குப்பழி... 10 ஆண்டுகளாக மனதில் வன்மத்தை பூட்டி வைத்து தஞ்சாவூர் அருகே பைக்கில் சென்ற ரவுடியை காரை விட்டு மோதி கீழே விழ வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் தினமும் காலையில் தனக்கு சொந்தமான தோப்பிற்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை ஏழுப்பட்டி மெயின்ரோடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி குறுந்தையன் பைக்குடன் கீழே விழுந்துள்ளார். குறுந்தையன் எழுந்து நிற்க முயற்சி செய்துள்ளார். அதற்குள் காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் குறுந்தையனின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதனால் அலறியபடியே குறுந்தையன் கீழே விழுந்தார். இருப்பினும் விடாமல் அந்த மர்ம கும்பல் மீண்டும் குறுந்தையனை வெட்டியுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் இரட்டை கொலை குற்றவாளிகள் - குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு...!
இதற்கிடையில் குறுந்தையன் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி காரி ஏறி உள்ளது. இதில் பொதுமக்கள் விரட்டியதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த குறுந்தையன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் குறுந்தையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குறுந்தையன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கடந்த 2013ம் ஆண்டில் உலகநாதன் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். 2014ம் ஆண்டில் உதயா என்பவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். மேற்கண்ட கொலைகளுக்கு பழிதீர்க்கவே தற்போது குறுந்தையனை கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
பின்னர் போலீசார் பொதுமக்களிடம் சிக்கிய நபரிடம் விசாரித்த போது அவர் பெயர் வடிவேலு என்பதும், இந்த கொலை சம்பவத்தில் ஒத்தக்கை ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்தது. பழிக்கு பழி வாங்கும் செயலாகவே குறுந்தையன் நடவடிக்கைகளை மறைந்திருந்து, அவர் எப்போது எங்கு செல்கிறார்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்... கோடைக்கால தொடர் விடுமுறையை அடுத்து பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவு இதுதான்...!ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்... கோடைக்கால தொடர் விடுமுறையை அடுத்து பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவு இதுதான்...!
யாருடன் செல்கிறார் என்பதை வேவு பார்த்து பின்னர் கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்று போலீசார் தரப்பில் கருதுகின்றனர். 10 ஆண்டுகளாக வன்மம் வைத்து தற்போது குறும்பையனை சரியான நேரம் பார்த்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

