Upcoming Cars: ரூபாய் 6 லட்சம் முதல் 30 லட்சம் வரை! விற்பனைக்கு வரப்போகும் அசத்தலான பட்ஜெட் கார்கள்! பட்டியலை பாருங்க
Upcoming Cars in India 2025: இந்தியாவில் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 30 லட்சம் வரை விற்பனைக்கு வர உள்ள டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் கார்களை கீழே காணலாம்.

Upcoming Cars in India 2025: இந்தியாவில் கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் உள்பட வசதி படைத்தவர்கள் உள்பட தங்களது நிதிக்கு ஏற்ப கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் கார்கள் வாங்க விருப்பமுள்ள நபர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்:
முன்னணி கார் நிறுவனமாக இந்தியாவில் உருவெடுத்து வரும் ரெனால்ட் அறிமுகப்படுத்த உள்ள கார் ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட். இந்த கார் நாளை மறுநாள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் விலை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து ரூபாய் 9 லட்சம் வரை. பெட்ரோலில் ஓடும் இந்த கார் 999 சிசி எஞ்ஜின் கொண்ட கார் ஆகும். 5 கியர் கொண்ட இந்த கார் மேனுவலாகவும், ஆட்டோமெட்டிக் கியராகவும் உள்ளது.

2. மஹிந்திரா பொலிரோ நியோ ஃபேஸ்லிப்ட்:
முன்னணி நிறுவனமான மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ள கார் மஹிந்திரா பொலிரோ நியோ ஃபேஸ்லிப்ட். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கார் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகமாக உள்ளது. 1493 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. டீசலில் இயங்கும் இந்த காரின் விலை ரூபாய் 10.21 லட்சத்தில் இருந்து ரூபாய் 10.90 லட்சம் ஆகும். இந்த கார் மேனுவல் கியர் ஆகும்.
3. மாருதி சுசுகி எஸ்குடோ:
இந்தியாவின் நம்பர் 1 கார் நிறுவனமாக திகழும் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார் மாருதி சுசுகி எஸ்குடோ கார். இந்த காரின் விலை ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை மட்டுமே ஆகும். 1462 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. பெட்ரோலில் இயங்கும் இந்த கார் 5 கியர்கள் கொண்டது.

4. மாருதி சுசுகி இ விஸ்தாரா:
மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார கார் இந்த மாருதி சுசுகி இ விஸ்தாரா. எலக்ட்ரிக் காரான இதன் எஞ்ஜின் திறன் 49 கிலோவாட் மற்றும் 61 கிலோ வாட் கொண்டது. இதன் விலை ரூபாய் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 550 கி.மீட்டர் தொலைவு வரை பயணிக்கலாம். இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வர உள்ளது.
5. ரெனால்ட் டஸ்டர்:
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் பல்வேறு மாற்றங்களுடன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. இந்தாண்டு பிற்பகுதியில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. 6 கியர்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் இந்த கார் வர உள்ளது. பெட்ரோலில் இந்த கார் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1330 சிசி மற்றும் 999சிசி கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட வடிவங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் விலை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை மட்டுமே ஆகும்.
6. ஹுண்டாய் நியூ வெனுயூ:

முன்னணி நிறுவனமான ஹுண்டாய் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் ஹுண்டாய் நியூ வெனுயூ. இதன் விலை ரூபாய் 8.20 லட்சம் முதல் 13 லட்சம் வரை மட்டுமே ஆகும். 998 சிசி, 1197 சிசி மற்றும் 1493 சிசி கொண்ட எஞ்ஜின்கள் பொருத்தப்பட்ட மாடலில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5, 6 மற்றும் 7 கியர்கள் கொண்ட காராக இந்த கார் வருகிறது.
7. டாடா சியாரா:
புகழ்பெற்ற டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கார் டாடா சியரா. 1498 சிசி, 1956 சிசி எஞ்ஜின் கொண்ட இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் உருவாக்கப்படுகிறது. நடப்பாண்டின் இறுதியில் வர உள்ள இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 17 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை ஆகும்.
8. டாடா சியாரா ஈவி:
டாடா சியாரா காரின் மின்சார வடிவமே இந்த டாடா சியாரா ஈவி. இந்த காரின் விலை ரூபாய் 20 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை ஆகும்.





















