ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்... கோடைக்கால தொடர் விடுமுறையை அடுத்து பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவு இதுதான்...!
Summer Special Train : கோடை கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் தெரிவித்துள்ளது.

கோடைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பு
கோடைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு பயணிகளின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சிராப்பள்ளி - தாம்பரம் இடையே திருச்சிராப்பள்ளி ஜனசதாப்தி விரைவு சிறப்பு ரயில் வண்டி எண்கள் (06190/06191) ஆகிய இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: "பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
ரயில் எண்: 06190 (திருச்சிராப்பள்ளி - தாம்பரம்) காலை 05.35 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடைகிறது. 04, 05, 06, 11, 12, 13, 18, 19, 20, 25, 26, 27 ஏப்ரல் 2025 ஆகிய தேதிகளில் மொத்தம் 12 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்: 06191 (தாம்பரம் - திருச்சிராப்பள்ளி) மாலை 15.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 22.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடைகிறது. 04, 05, 06, 11, 12, 13, 18, 19, 20, 25, 26, 27 ஏப்ரல் 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 12 நாட்கள் சேவை வழங்கப்பட உள்ளது.
இந்த இரு ரயில்களும் ஏப்ரல் 4, 5, 6, 11, 12, 13, 18, 19, 20, 25, 26, 27 (2025) ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படும்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் இரட்டை கொலை குற்றவாளிகள் - குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு...!
நின்று செல்லும் ரயில் நிலையங்கள்
இந்த ரயில்கள், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று பயணிக்கும்.
முன்பதிவு
இந்த சிறப்பு ரயில்களின் முன் பதிவானது நாளை 12.03.2025 காலை 08.00 மணி முதல் தொடங்குகிறது. பயணிகள் முன்பதிவு செய்து பயனடையலாம் என்றும், மேலும் தகவல்களுக்கு, தெற்கு ரயில்வே இணையதளத்தைக் (www.sr.indianrailways.gov.in) காணலாம் என தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
பயணித்துக் கொள்ளும் நிலையங்கள் & நேரங்கள்
திருச்சிராப்பள்ளி - தாம்பரம் ஜனஷதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது தஞ்சாவூர் (06:24), பாபநாசம் (06:46), கும்பகோணம் (06:58), மயிலாடுதுறை (07:28), சீர்காழி (07:52), சிதம்பரம் (08:08), திருப்பாதிரிப்புலியூர் (08:53), பண்ருட்டி (09:14), விழுப்புரம் (09:55), திண்டிவனம் (10:33), மேள்மருவத்தூர் (10:58), செங்கல்பட்டு (11:28) ஆகிய இடங்களில் நின்று, தாம்பரத்தை மதியம் 12:30 மணிக்கு அடையும்.
தாம்பரம் - திருச்சிராப்பள்ளி ஜனஷதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06191) மாலை 15:45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 22:40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும். இந்த ரயில் செங்கல்பட்டு (16:13), மேள்மருவத்தூர் (16:38), திண்டிவனம் (17:03), வில்லுப்புரம் (17:40), பண்ருட்டி (18:13), திருப்பாதிரிப்புலியூர் (18:33), சிதம்பரம் (19:10), சீர்காழி (19:26), மயிலாடுதுறை (19:50), கும்பகோணம் (20:18), பாபநாசம் (20:30), தஞ்சாவூர் (21:13) ஆகிய இடங்களில் நின்று, இரவு 22:40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும்.






















