மேலும் அறிய

200 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களே கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சரித்திர நாடகம்

பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.

தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசியில் கண் விழிக்க வேண்டும் என்பதால் 200 ஆண்டுகளாக இரவில் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர் தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராம மக்கள். அந்த வகையில் இந்தாண்டும் நாடக விழா சிறப்பாக நடந்தது.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொக்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.

இரவில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு வள்ளி திருமணம், ருக்மாங்கதன், ராமாயணம், சத்தியவான் சாவித்ரி நாடகங்கள் நடத்தப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களே கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சரித்திர நாடகம்

இந்த நாடகங்களுக்கு தேவையான கதாபாத்திரங்களில் கிராம மக்களே சிறப்பான நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே நடித்து வருகின்றனர். இன்றும் பாரம்பரியத்தோடு சரித்திர நாடகங்களை நடத்தி வருங்கால  தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3 நாட்கள்  வள்ளித் திருமணம், ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் கூறுகையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம். 

எங்கள் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பு ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர். நாடகம் நடத்த ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கி விடும். நாடக கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்
EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
Annamalai: திருநீறு வச்சு ருத்ராட்சம் போட்டு பள்ளிக்கு போகனும்.. மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்
Annamalai: திருநீறு வச்சு ருத்ராட்சம் போட்டு பள்ளிக்கு போகனும்.. மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்
அப்பாவை மிஞ்சிவிட்டார் சூர்யா சேதுபதி...புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாண்டியராஜ்
அப்பாவை மிஞ்சிவிட்டார் சூர்யா சேதுபதி...புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாண்டியராஜ்
பூரி ரத யாத்திரை... நெரிசலில் சிக்கிய மக்கள்.. 500-க்கு மேற்ப்பட்டோர் காயம் அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
பூரி ரத யாத்திரை... நெரிசலில் சிக்கிய மக்கள்.. 500-க்கு மேற்ப்பட்டோர் காயம் அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
IND vs ENG 2nd Test: 4 பேருதான்! 58 வருஷத்துல எட்ஜ்பாஸ்டனில் சதம் விளாசியது இவங்க மட்டும்தான்!
IND vs ENG 2nd Test: 4 பேருதான்! 58 வருஷத்துல எட்ஜ்பாஸ்டனில் சதம் விளாசியது இவங்க மட்டும்தான்!
Embed widget