அப்பாவை மிஞ்சிவிட்டார் சூர்யா சேதுபதி...புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாண்டியராஜ்
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.
நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, "பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய நண்பனின் மகன் சூர்யா நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நானும் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் நேரடியாக சென்று கொண்டே இருங்கள் சூர்யா. நீங்கள் மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு மாமனாக வாழ்த்துகிறேன்".
பாடலாசிரியர் விவேகா அவர்கள் பேசும்போது
"மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி எஸ் அவர்கள் பிரமாதமாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா அவர்களின் முதல் படமே சிறப்பாக வந்துள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வருவதற்கு இந்த படமே ஒரு எடுத்துக்காட்டு. பீனிக்ஸ் என்பது ஒரு நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கைதான் ஒரு வாழ்க்கையின் முக்கியமானது. நம்பிக்கைதான் நம்மை நகர்த்துகின்ற மிகப் பெரிய பலம். இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்".
சூர்யாவை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாண்டியராஜ்
"அனைவருக்கும் வணக்கம். சூர்யா அவர்களுக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். அனல் அரசு அவர்களுடன் ஒரே ஒரு படம் மட்டும் தான் ஒர்க் பண்ணி உள்ளேன், அதிலும் ஒரே ஒரு பைட் சீன் தான். இருப்பினும் நாம் என்ன எடுக்கப் போகிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் ஒரு சில மாஸ்டர்களில் இவரும் ஒருவர். இந்த படத்தின் டிரைலர் பார்க்கும்போது படம் அற்புதமாக வந்துள்ளது தெரிகிறது. பசங்க படத்தில் கமிட் ஆகும்போது விஜய் சேதுபதி அவர்களை தெரியும். விஜய் சேதுபதி அவர்களிடம் மனிதாபிமானம் உள்ளது. சூர்யா அவர்களிடம் நல்ல ஒரு தெளிவு உள்ளது. பல நாட்களாக சினிமாவை கரைத்து குடித்தது போல் தெளிவான பேசினார். விஜய் சேதுபதி அவர்களைவிட, அவரது மகன் சூர்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் விஷால் அவர்களை பார்க்கும்போது என்ன தோன்றியதோ அதேபோல் தான் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது தோன்றுகிறது. விஜய் சேதுபதி அவர்களின் 10 படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தாலே சூர்யா நல்ல நடிகராக வந்துவிடலாம். ஒரு அண்ணனாக நானும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய. வாழ்த்துக்கள்.





















