பூரி ரத யாத்திரை... நெரிசலில் சிக்கிய மக்கள்.. 500-க்கு மேற்ப்பட்டோர் காயம் அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றால் 500-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு காயமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒடிசாவின் பூரியில் நடந்த உலகப் புகழ்பெற்ற மகாபிரபு ஜெகநாதரின் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட அதிக கூட்ட நெரிசலில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
ஜெகன்நாதர் கோவில் ரதயாத்திரை:
உலகப் புகழ்பெற்ற மகாபிரபு ஜெகந்நாதரின் ரத யாத்திரை கொண்டாடப்பட்டது. பிரமாண்டமான விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் பூரியை அடைந்தனர்.
ரத யாத்திரை விழாவின் முக்கிய பகுதி வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னதிக்கு அருகிலிருந்து ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்குச் செல்லும் சாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவான் ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதரர்களின் தேர்களில் இணைக்கப்பட்ட கயிறுகளை இழுத்தனர். ஒடிசா ஆளுநர் ஹரி பாபு கம்பம்பதி, முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் பல பிரமுகர்கள் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பாலபத்ரரின் தேர்களை இழுத்தவர்களில் அடங்குவர்.
அப்போது தான் நெரிசலில் சிக்கி மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றால் 500-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு காயமடைந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்படும் - ஒடிசா அமைச்சர்:
ஜகன்னாதர் ரத யாத்திரையின் போது சிலர் மயக்கம் அடைந்ததாக வந்த தகவல்கள் குறித்து, ஒடிசா அமைச்சர் முகேஷ் மஹாலிங் கூறுகையில், அதிக ஈரப்பதம் காரணமாக ஒன்று அல்லது இரண்டு பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். மீட்புக் குழுவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்... கோயில் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக நான் இங்கு இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார். தேவைப்படுபவர்களுக்கு சரியான சுகாதாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் செல்வேன் என்றார்.
#WATCH | Puri, Odisha | On reports of some people getting unconscious during the Jagannath Rath Yatra, Odisha Minister Mukesh Mahaling says, "...Due to high humidity, one or two devotees collapsed. The rescue teams took them to the hospital immediately... There are primary health… pic.twitter.com/UaXe1kYlyC
— ANI (@ANI) June 27, 2025
10 லட்சம் பேர் பங்கேற்பு
கோவில் நிர்வாகத்தின் தகவல், ரத யாத்திரையில் பங்கேற்க பூரியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஒடிசா காவல்துறை, மத்திய ஆயுதப்படை காவல் படை, என்எஸ்ஜி மற்றும் பிறவற்றைச் சேர்ந்த சுமார் 10,000 பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.






















