மேலும் அறிய

முதலாம் ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னங்கள்... வரலாற்று நாட்காட்டி வெளியீடு

வடபுலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய போர் நினைவு சின்னங்களையும், அதன் வரலாற்று சிறப்புகளையும் தெரிவிக்கும் விதமாக இந்த வரலாற்று நாட்காட்டி கங்கை கொண்டான் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் வெற்றி சின்னங்கள் பற்றிய வரலாற்று நாட்காட்டி-2025 வெளியீட்டு விழா நடந்தது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லுரியில் (தன்னாட்சி) முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் வெற்றிச் சின்னங்கள் பற்றிய வரலாற்று நாட்காட்டி-2025 வெளியீட்டு விழா கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் நடந்தது. இதுகுறித்து சங்கத்தின் நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான கும்பகோணம் கோபிநாத் கூறியதாவது:

பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரி என வரலாற்றில் அறியப்படும் சோழ சக்கரவர்த்திகள் முதலாம் இராஜேந்திரசோழனின் கங்கை படையெடுப்பு பற்றி அறிந்த பலருக்கும் அந்த வெற்றியின் நினைவாக வடபுலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய போர் நினைவு சின்னங்களையும், அதன் வரலாற்று சிறப்புகளையும் தெரிவிக்கும் விதமாக இந்த வரலாற்று நாட்காட்டி கங்கை கொண்டான் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்காட்டியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிற்பம் என புகைப்படத்துடன் அதன் வரலாற்று தகவல்களையும் தமிழ், ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளோம். இந்த தகவல்களை ஆழ்ந்து படிக்கும்போது அந்த சிற்பம் எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் பூர்வீகம் என்ன என்பது பற்றியும், நம்முடைய சிற்ப கலை படைப்பிற்கும் அவர்களுடைய சிற்பக்கலை படைப்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெளிவுற அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகள் மற்றும் எசாலம் செப்பேடுகள் குறித்த தகவல்களையும் விளக்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த நாட்காட்டியினை கல்லூரி முதல்வர் முனைவர் பிரமிளா வெளியிட, வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் சாந்தா ஜெயக்குமாரி மற்றும் வணிகவியல் துறைத்தலைவரும், தேர்வு கட்டுப்பாடு அலுவலருமான முனைவர் ஜெயசீலி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் கல்லூரியின் மற்ற துறைத்தலைவர்களுக்கும், மாணவிகளுக்கும் நாட்காட்டி வழங்கப்பட்டது. சங்கத்தின் இணைச்செயலாளர் ராம் பிரசாந்த் நன்றி கூறினார்.

ராஜேந்திர சோழனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாளமாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திர சோழன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினார்.

இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன. யுதிஷ் டிரர் கோயில் கருவறையின் நிலை வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டில் தமிழிலும் சமஸ் கிருதத்திலும் பதிவுகள் உள்ளன. அதில், ‘ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும், மலைநாட்டு அரசர்களையும், கலிங்க அரசனை யும் வென்று மகேந்திர மலை உச்சி யில் விஜயஸ்தம்பத்தை நாட்டி னான்’ என்று குறிப்பு உள்ளது. 

இக்கல்வெட்டுக்குக் கீழே, வரைகோட்டு வடிவில், அமர்ந்த நிலையில் புலியின் ஊருவமும் 2 மீன் களின் உருவங்களும் சோழர் இலச்சினையாகக் காணப்பெறுகின்றன. அருகில் உள்ள குந்தி கோயில் வளாகத்தில் மூன்று நான்கு துண்டு களாகக் கிடக்கும் கல்வெட்டில், மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும், ஒடிசா மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற ராஜேந்திரனின் தலைமை தளபதி (மகாநாயகன்) ராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜராஜ மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரி சாக அளிக்கப்பெற்றதும், ‘விட்டி வீரண மல்லன்’ என்ற விருது அளிக்கப்பெற்றதும் குறிப்புகளாகக் காணப்படுகின்றன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Warns 3 Countries: அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
MG EV Car Price: அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
Israel's Defence HQ Hit: அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warns 3 Countries: அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
MG EV Car Price: அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
Israel's Defence HQ Hit: அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
Embed widget