MG EV Car Price: அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
MG EV Car Price Drop: மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எம்ஜி, அதன் ZS இவி காரின் விலையில், அதிரடியாக 6.14 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

எம்ஜி நிறுவனம், இந்தியாவில் பல்வேறு மின்சார கார் மாடல்களை அறிமுகப்படுத்தி முன்னணியில் உள்ளது. அந்த வரிசையில் அந்நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்திய மின்சார கார் மாடல்தான் ZS. 2 வருடங்களுக்கு முன் இந்த காரின் விலையை குறைத்த நிலையில், தற்போது மீண்டும் விலையை குறைத்துள்ளது எம்ஜி நிறுவனம். அதன்படி, 6.14 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
விலை அதிகமாக இருந்த ZS மின்சார கார்
அதிக சிறப்பம்சங்களை கொண்டிருந்ததன் காரணமாக, எம்ஜி ZS மின்சார கார் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால், இந்த காரின் விலை தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக 6.14 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
எம்ஜி இஸட்எஸ் மின்சார காரின் Executive வேரியண்ட்டின் விலையில் 99,000 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 17.99 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Excite ப்ரோ வேரியண்ட்டின் விலையில் 1.98 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 18.50 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், Exclusive ப்ளஸ் டார்க் க்ரே வேரியண்ட்டின் விலையில் 5.65 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 19.50 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், Exclusive ப்ளஸ் ட்யூயல் டோன் ஐகானிக் ஐவரி வேரியண்ட்டின் விலையில், 5.85 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 19.50 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மறுபக்கம் 100 Year Edition வேரியண்ட்டின் விலையிலும் 5.85 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையும் 19.50 லட்சம் ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸன்ஸ் டார்க் க்ரே வேரியண்ட்டின் விலையில் 5.94 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 20.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, எஸன்ஸ் ட்யூயல் டோன் ஐகானிக் ஐவரி வேரியண்ட்டின் விலையில் 6.14 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, அந்த காரின் புதிய விலையும் 20.50 லட்சம் ரூபாயாகத்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் விலைதான் இருப்பதிலேயே அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி விலை குறைப்பால், வரும் மாதங்களில் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ZS மின்சார காரின் சிறப்பம்சங்கள்
ZS மின்சார கார், 177hp மற்றும் 280Nm டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரை பயன்படுத்துகிறது. இதில் உள்ள 50.3kWh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 461 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். 50kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, ஒரு மணி நேரத்தில் 0-80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யலாம் என்றும், 7.4kW சார்ஜரைப் பயன்படுத்தி 9 மணி நேரத்தில் 0-100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், 10.1-இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜர், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இந்த காரில் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ADAS, 6 ஏர்பேகுகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் மலை இறங்கு கட்டுப்பாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இந்திய சந்தையில் இந்த காரானது Tata Nexon EV, மஹிந்திரா XUV400 மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















