”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்
நிறைய சீட் தான் வேணும்னு இபிஎஸ் கிட்ட பிடிவாதமா இருக்கக் கூடாது, இந்த தேர்தல்ல ஒரே ஒரு டார்கெட் தான் என்று தமிழக பாஜகவினரிடம் அமித்ஷா ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. தொகுதி பங்கீட்டை தாண்டி வேறு ஒரு பக்கா ப்ளானுடன் அமித்ஷா கூட்டணியில் அடியெடுத்து வைத்துள்ளதாக சொல்கின்றனர்.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 177 தொகுதிகளை வசமாக்கிக் கொண்ட அதிமுக, 23 தொகுதிகளை பாமகவுக்கும், 20 தொகுதிகளை பாஜகவுக்கும் ஒதுக்கியது. அப்போதே 40 தொகுதிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 40, 50 தொகுதிகளையாவது கேட்டு வாங்கி விட வேண்டும் என தமிழக பாஜகவினர் பிடிவாதமாக இருக்கின்றனர். இதுபற்றி பாஜக தலைமையின் காதுகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
ஆரம்பத்தில் அமித்ஷா அதற்கு ஓகே சொல்லி இபிஎஸ்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அத்தனை தொகுதிகளை மொத்தமாக கொடுத்துவிட இபிஎஸ் மறுத்து விட்டதாகவும் என்றும் சொல்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அந்த தேர்தலில் 11.24% வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைந்தது பாஜக. அதனை வைத்து பாஜக தரப்பில் அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால் தமிழக பாஜகவினர் தான் அதிக தொகுதிகள் வேண்டும் என பிடிவாதமாக இருப்பதாகவும் டெல்லி தலைமைக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சொல்கின்றனர். அதிமுக கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் உறுதியாக இருக்கின்றனர். அதனை கெடுக்கும் வகையில் இருக்கும் எதையும் செய்ய வேண்டாம் என்பதே தலைமையின் முடிவாக இருக்கிறது. நயினார் நாகேந்திரனை மாநில தலைவர் ஆக்கியது, கூட்டணியின் ஓபிஎஸ்-ன் நிலை என்ன என்று சொல்லாமல் இருப்பது என அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளையே பாஜக எடுத்து வருகிறது.
அதனால் இந்த தேர்தலில் 40 தொகுதிகளை கேட்க வேண்டாம் என்றே அமித்ஷா நினைப்பதாக சொல்கின்றனர். 2026 தேர்தலில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக தலைமையின் நோக்கமாக இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் அதிமுக கூட்டணி ஆட்சியமைத்தால் சாதகமான நிலைமை இருக்கும் என அமித்ஷா கணக்கு போட்டுள்ளார். அதனால் பாஜக நேரடியாக போட்டி போட்டு தோல்வியடைந்தால் அது திமுக மீண்டும் ஆட்சியமைப்பதற்கு சாதகமாக இருக்கும் என்பதால், கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் எண்ணிக்கையையே பேசி வாங்கிக் கொள்ளலாம் என அமித்ஷா முடிவெடுத்ததாக சொல்கின்றனர். பாஜகவுக்கு அதிக சீட் கொடுத்து தோற்று விடக் கூடாது என்பதை மனதில் வைத்து தான் இபிஎஸ்-ம் விடாப்பிடியாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.





















