TN Headlines Today: பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு.. மருத்துவர்களுக்கு செக் வைத்த அரசு.. மாநிலச் செய்திகள் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- உயிரை காப்பாற்றவே குழந்தையின் கை நீக்கம்” - விசாரணை செய்த மருத்துவக் குழு விளக்கம்..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அழுகியதாக அகற்றப்பட்ட விவகாரத்தில் அரசு நியமித்த விசாரணைக் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டதாவும் Venflon ஊசி தமனியில் போடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pseudomunas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று இரத்த ஓட்டத்தை பாதித்ததால் குழந்தைக்கு வலது கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thrombosis) ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி வேண்டும் - ஆளுநருக்கு கடிதம் எழுதிய சட்டத்துறை அமைச்சர்..!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக (Sanction) அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு.. தீர்மானம் நிறைவேற்றம்
மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்திற்கு அதிமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க பொது சிவில் சட்டத்தை பாஜக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
- செந்தில்பாலாஜி வழக்கு : 3வது நீதிபதியாக கார்த்திகேயன் அறிவிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொண்டர்வு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜியை கைது செய்ததது சட்ட விரோதம் என்றும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதி செந்தில்பாலாஜியை சிகிச்சை முடிந்தவுடன் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அமலாக்கத்துறைக்கு சாதமாக தீர்ப்பை வழங்கினார். அதனால் 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
- மருத்துவர்களுக்கு செக்...! கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு - சுகாதாரத்துறை செயலாளர் அவசர கடிதம்
தமிழ்நாட்டில் பல்வேறு படிநிலைகளில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது வழக்கம். இதுதொடர்பாகவும், சிகிச்சையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்தும் வருகிறது. இப்படியான நிலையில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் படிக்க