செந்தில்பாலாஜி வழக்கு : 3வது நீதிபதியாக கார்த்திகேயன் அறிவிப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொண்டர்வு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜியை கைது செய்ததது சட்ட விரோதம் என்றும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மற்றொரு நீதிபதி செந்தில்பாலாஜியை சிகிச்சை முடிந்தவுடன் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அமலாக்கத்துறைக்கு சாதமாக தீர்ப்பை வழங்கினார். அதனால் 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க 3வது நீதிபதியை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.