மேலும் அறிய

சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!

சோழப்‌ பேரரசின்‌ பெருமையைக்‌ கொண்டாட வேண்டியது தங்கள்‌ கடமை என மறந்து, பாஐ௧ கையில்‌ அடைக்கலம்‌ புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின்‌ பெருமையையும்‌ அடகு வைத்துள்ளது திமுக - விஜய்.

தி.மு.க., பா.ஜ.க.வின்‌ அரசியல்‌ ஆதாய நாடகத்தைத்‌ தமிழக மக்கள்‌ ஏற்கமாட்டார்கள்‌ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கங்கை கொண்டான்‌, கடாரம்‌ வென்றான்‌ என்று பெயர்‌ பெற்ற, கடல்‌ கடந்து படை நடத்தி, இலங்கை முதல்‌ இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதையும்‌ ஒரு குடையின்‌ கீழ்‌ ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன்‌, மாபெரும்‌ வெற்றிச்‌ சரித்திரத்தைத்‌ தன்‌ மார்பினில்‌ தாங்கியவன்‌ சோழப்‌ பேரரசின்‌ வெற்றிப்‌ பேரொளியாகத்‌ திகழ்ந்த ராஜேந்திர சோழன்‌.

வெற்றியின்‌ அடையாளம்

ராஜராஜ சோழனின்‌ மகனாகப்‌ பிறந்தாலும்‌ தந்தையையும்‌ தாண்டி வெற்றித்‌ தடம்‌ பதித்த தமிழ்ப்‌ பேரரசன்‌, தன்‌ வெற்றியின்‌ அடையாளமாக இருப்பதற்காக அமைத்த நகரம்தான்‌ கங்கைகொண்ட சோழபுரம்‌. ஆயிரம்‌ ஆண்டுகளாகத்‌ தமிழர்களின்‌ பெருமைக்குரிய அடையாளமாக நிமிர்ந்து நிற்கிற ஒரு நகரம்‌. கங்கைகொண்ட சோழபுரம்‌ கோவில்‌, யுனெஸ்கோவால்‌ உலகப்‌ பாரம்பரியச்‌ சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருஞ்சிறப்பு கொண்டது.

மாபெரும்‌ யானைப்‌ படை, கடற்படையைக்‌ கட்டமைத்திருந்த வீறுமிகுந்த சோழப்‌ பேரரசால்‌ அமைக்கப்பட்டு, இன்றளவும்‌ தமிழ்‌ மண்ணுக்கும்‌ தமிழகத்திற்கும்‌ தனிப்பெரும்‌ அடையாளமாக இருக்கும்‌ கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும்‌ தமிழ்நாட்டையும்‌ ஓரவஞ்சனையுடன்‌ ஒதுக்கும்‌ ஒன்றிய பா.ஐ.௧. அரசின்‌ பிரதமர்‌ வந்து, ராஜராஜ சோழனுக்கும்‌ ராஜேந்திர சோழனுக்கும்‌ சிலைகள்‌ அமைக்கப்படும்‌ என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப்‌ பாடம்‌ எடுப்பது போலவும்‌ பேசிச்‌ சென்றுள்ளார்‌.

வெற்று விளம்பர மாடல்‌ தி.மு.க. அரசு

75 ஆண்டுகளைக்‌ கடந்த கட்சி என்றும்‌ தமிழ்‌, தமிழர்‌ அடையாளம்‌ என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும்‌ பொய்யாக மார்‌ தட்டிக்கொள்ளும்‌ தற்போதைய ஆளும்‌ கட்சியான தி.மு.க., தமிழர்‌ பெருமையான சோழப்‌ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால்‌ இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும்‌ ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக்‌ கையில்‌ எடுத்திருக்காது. இதையெல்லாம்‌ செய்யாமல்‌, ஒன்றியப் பிரதமர்‌ வருகை தமிழ்நாட்டுக்குப்‌ பெருமை என்று வாஞ்சையாகச்‌ சொல்லிச்‌ சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல்‌ தி.மு.க. அரசு.

சோழப்‌ பேரரசின்‌ பெருமையைக்‌ கொண்டாட வேண்டியது தங்கள்‌ கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஐ.௧. கையில்‌ அடைக்கலம்‌ புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின்‌ பெருமையையும்‌ அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு''.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget