பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சினிமாவில் வருவது போல் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
![பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்! Seizure of 23 kg Ganja valued at Rs 23 Crore by Air Customs at Anna International Airport Chennai பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/556a0e78d82ef0e785d89f12ac26491b1738148825994333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் அதிரடி:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இதையும் படிக்க: Special Marriage Act: சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன? அறிந்துகொள்ள வேண்டிய நிபந்தனைகள், ஆட்சேபனைகள்
அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்த 26ஆம் தேதி, பாங்காக்கிலிருந்து சென்னை வந்த இந்தியப் பயணிகள் 3 பேரை (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் ஒரு பெண்) இடைமறித்து பரிசோதனை செய்தனர்.
Customs Seize 9.978 kg of Suspected Hydroponic Weed Worth ₹9.978 Crore at IGI Airport, New Delhi
— Delhi Customs (Airport & General) (@AirportGenCus) January 28, 2025
The Customs officers at Indira Gandhi International (IGI) Airport, New Delhi, have booked a case of smuggling involving a green-colored NDPS substance suspected to be… pic.twitter.com/reXRxziKhW
சினிமாவில் வருவது போல் கடத்தல் சம்பவம்:
அவர்களின் உடைமைகளை பரிசோதித்த போது குளிர்பதன செய்யப்பட்ட பழப் பெட்டிகளில் 23.48 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத சந்தையில் இதன் மதிப்பு ரூ.23.5 கோடியாகும்.
இந்தப் பயணிகள் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)