Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு, புதிய உச்சத்தை எட்ட உள்ளது. தங்கத்தின் விலை இன்று(29.01.25) அதிரடியாக சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது.
![Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை... Gold Rate Increases and Nearing Rupees 61000 Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/27/075aece632a7f5996920e07d8be64045173796392149253_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டிவருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து, 61000 ரூபாய் என் புதிய உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை சென்றுகொண்டிருக்கிறது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை
2025 பிறந்ததிலிருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் உள்ளது. அவ்வப்போது சிறிதளவு குறையும் தங்கத்தின் விலை, உயரும்போது அதிக அளவில் உயர்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது, ஜனரி 1-ம் தேதி கிராம் ஒன்றிற்கு 7,150 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை தற்போது கிராமிற்கு, 7,595 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் மட்டும் கிராமிற்கு 445 ரூபாய் உயர்ந்துள்ளது. இது சவரனாக பார்க்கும்போது, இந்த மாதத்தில் மட்டும் 3,560 ரூபாய் உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் தொடக்க மாதத்திலேயே இந்த அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளதால், போகப்போக என்ன ஆகுமே என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரூ.61,000-ஐ நெருங்கம் தங்கத்தின் விலை
இன்றைய(29.01.25) நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 7,595 ரூபாயாகவும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 60,760 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை தற்போது 61,000 ரூபாயை நெருங்கி, புதிய உச்சத்தை அடைந்துவருவதால், மக்கள் கலக்கமடைந்துள்ளர்.
மாற்றமில்லாமல் தொடரும் வெள்ளி விலை
தங்கத்தின் நிலை இப்படி இருக்க, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. கடந்த 26-ம் தேதி கிராம் ஒன்றிற்கு 105 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, ஒரு ரூபாய் குறைந்து, 27-ம் தேதி முதல் 104 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. தொடர்ந்து, அதே விலையில் நீடித்து வருகிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)