ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
2008ஆம் ஆண்டு பேட்ச் மத்தியப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிபி சக்கரவர்த்தி, மாநில முதலமைச்சர் மோகன் யாதவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
![ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி? Sibi Chakkravarthy IAS Erode native MP IAS Officer became the secretary to the Chief Minister ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/f2d98e27f488b4d71051f4d9b3e45ad81738131462815332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்தியப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிபி சக்கரவர்த்தி, தற்போது அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பெருவாரியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு ஆளாகினர்.
இதில், 2008ஆம் ஆண்டு பேட்ச் மத்தியப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிபி சக்கரவர்த்தி, மாநில முதலமைச்சர் மோகன் யாதவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் துறை ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு வகித்த பதவிகள் என்னென்ன?
இதற்கு முன்னதாக சிபி சக்கரவர்த்தி ஐஏஎஸ், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகார ஆணையர், மத்தியப் பிரதேச கிடங்கு மற்றும் தளவாடக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உட்பட மாநிலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார்.
அதேபோல மத்தியப் பிரதேசத்தின் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குநர் பதவியையும் வகித்தார். மேலும் மத்தியப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், பிந்த் மற்றும் நரசிங்பூர் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் இயக்குநராகவும் பணியாற்றி தேசிய நிர்வாகத்திற்கும் பங்களித்தார்.
யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தவர் சிபி சக்கரவர்த்தி.
உலகப் புகழ்பெற்ற செவனிங் உதவித்தொகையைப் பெற்ற சிபி சக்கரவர்த்தி, லண்டனின் கிங்ஸ் கல்லூரி பட்டதாரி ஆவார்.
யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், 2008ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தற்போது, ம.பி. மாநில முதலமைச்சர் மோகன் யாதவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)