AIADMK vs BJP: போட்டுத்தாக்கிய டெல்லி மேலிடம்! எடப்பாடி காலில் விழுந்து பதவியை தக்க வைத்துக்கொண்ட அண்ணாமலை! கசிந்தது தகவல்!
திமுகவை ஒரு பக்கம் தாக்கினால் கூட்டணியில் இருந்த அதிமுவையும் அவரால் தாக்காமல் இருக்க முடியவில்லை.
![AIADMK vs BJP: போட்டுத்தாக்கிய டெல்லி மேலிடம்! எடப்பாடி காலில் விழுந்து பதவியை தக்க வைத்துக்கொண்ட அண்ணாமலை! கசிந்தது தகவல்! Tamil Nadu Assembly Election 2026 AIADMK BJP Alliance Annamalai Secured Position AIADMK vs BJP: போட்டுத்தாக்கிய டெல்லி மேலிடம்! எடப்பாடி காலில் விழுந்து பதவியை தக்க வைத்துக்கொண்ட அண்ணாமலை! கசிந்தது தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/b6855c898ee187a9132f48638cc146c31738136935917333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அன்று முதல் பல அதிரடி முடிவுகளை எடுத்தார். கண்டதையும் பேசி தன்னுடைய இருப்பை காட்டிக்கொண்ட அண்ணாமலை அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளையும் சரமாரியாக தாக்கிப்பேச ஆரம்பித்தார்.
திமுகவை ஒரு பக்கம் தாக்கினால் கூட்டணியில் இருந்த அதிமுவையும் அவரால் தாக்காமல் இருக்க முடியவில்லை. தனித்தலைவராக காட்டிக்கொள்ள முயற்சி செய்த அண்ணாமலை அதிமுகவுக்கு சாதமாக பேசினால் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்து விடுவார்கள் என எண்ணியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை.
இதனால் அதிமுக கொதித்து எழுந்தது. கூட்டணியா அதிமுக தலைவர்களா என கேள்வி எழுந்தபோது எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவர்களின் பக்கமே நின்று பாஜக கூட்டணியை உதறி தள்ளினார். அன்றுமுதல் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இடையே பனிபோர் நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எங்கு பார்த்தாலும் அண்ணாமலையை சரமாரியாக தாக்கி பேசினர். அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என பாஜக மூத்த தலைவர்களே டெல்லி மேலிடத்தில் போட்டுக்கொடுத்டு விட்டனர். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அமித்ஷா.
ஒரு கட்டத்திற்கு மேல் இனிமேலும் விட்டு வைத்தால் கட்சி தமிழகத்தில் வளராது என எண்ணிய அமித்ஷா, அண்ணாமலையை மாற்ற முடிவு செய்துள்ளார்.
இதனால் பாஜக மூத்த தலைவர்கள் குஷியாகி தலைவர் லிஸ்ட்டில் குதித்து மேலிடத்தை தங்கள் பக்கம் ஈர்க்க ஆளாளுக்கு மைக்கை பிடித்து கத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் என மூத்த தலைவர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி போட்டனர். இதனால் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் நிற்கிறது.
இதையெல்லாம் கண்காணித்த அண்ணாமலை இதற்கு மேல் போனால் நாம் அவ்வளவுதான் என உணர்ந்து சாட்டையடி சம்பவத்தை அரங்கேற்றினார். போதாதற்கு காலில் இனி செருப்பை அணியமாட்டேன் எனவும் கூறி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ஆனால் டெல்லி மேலிடம் மட்டும் அவர் பக்கம் திரும்பவே இல்லை.
என்னடா வீரனுக்கு வந்த சோதனை என்று எண்ணிய அண்ணாமலை சாட்சி செல்லுபடியாகவில்லை. சண்டைக்காரன் பக்கம் செல்வோம் என எடப்பாடி காலிலேயே சரண்டர் ஆகிவிட்டார்.
காலை பிடித்து ஊர்ந்து வந்தவர் எடப்பாடி என்ற விமர்சனம் அனைத்து தரப்பு அரசியல் கட்சியினராலும் வைக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது அண்ணாமலை தனது பதவியை தக்கவைத்து கொள்ள எடப்பாடியிடம் சரண்டர் ஆகியுள்ளார்.
எடப்பாடியின் மகன் மிதுனை சந்தித்து அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்று கூடுவோம் என அவரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கிட்டத்தட்ட மிதுன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கும் ஒரு காரணம் உண்டு. சமீபத்தில் எடப்பாடிக்கு சொந்தமான நெருங்கிய வட்டாரத்தில் ஐடி ரெய்டு பறந்துள்ளது. இதை உடனடியாக நிறுத்தி விடலாம் என்றும் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக மிதுனை அழைத்துக்கொண்டு டெல்லி பறந்த அண்ணாமலை அமித்ஷாவிடமும் பேசியுள்ளார்.
ஆனால் ஒரு மூன்று மாதம் மிதுன் டைம் கேட்டதாக தெரிகிறது. ஏனென்றால் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி மலர இப்பதாக மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது. அண்ணாமலை அதிமுக தலைவர்களை பற்றி இனி பேசமாட்டேன் என சரணாகதி அடைந்துள்ளதால் எடப்பாடியும் சற்று குளிர்ந்துள்ளார்.
எனவே ஓரளவுக்கு அண்ணாமலை பதவி தப்பிவிட்டது என எண்ணிய மூத்த தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தலைவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர். இன்னும் நயினார் நாகேந்திரன் மட்டும் வெயிட்டிங்கில் இருப்பதாக தெரிகிறது. கூட்டணி உறுதியானால் அவரும் வாபஸ் மோடுக்கு வந்துவிடுவார் எனத் தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)