New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
ஓட்டு வாங்குங்கன்னா, இப்படி தொடர்ந்து கேஸா வாங்குறதுன்னு கேக்குற அளவுக்கு, சீமான் மேல போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு பஞ்சமில்ல. அந்த வரிசைல, இப்ப புதுசா ஒரு கேஸ் வாங்கியிருக்கார்.

வழக்குங்கறது சீமானுக்கு ஒன்னும் புதுசு இல்ல. ஏற்கனவே ஏகப்பட்ட வழக்குகள சந்திச்சுட்டு இருக்கற அவரு, சமீபத்துல பெரியார் பத்தி பேசின அவர் மேல நிறைய வழக்குகள் பதிவாச்சு. இந்த நிலைல, இப்போ அவர் மேல புதுசா ஒரு வழக்கு பதியப்பட்டுருக்கு. அது எதுக்காகன்னு பார்க்கலாம் வாங்க.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கு. இதுக்காக, தேர்தல்ல போட்டியிடுற கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்துல ஈடுபட்டுட்டு இருக்காங்க. அந்த வகையில, நாம் தமிழர் கட்சி சார்பா, போட்டியிடுற சீதாலட்சுமிய ஆதரிச்சு, நெரிக்கல் மேடு பகுதில, நாம் தமிழர் கட்சியோட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்துல கலந்துகிட்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்துக்காக, மாலை 5.30 மணியில இருந்து 6.30 மணி வரைக்கும் அனுமதி வேணும்னு, காவல்துறை கிட்ட நாம் தமிழர் கட்சியினர் கேட்ட நிலையில, காவல்துறையும் அனுமதி வழங்கியிருக்கு.
சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
சீமானோட சிறப்புரைக்காக ஒருவழியா நாம் தமிழர் கட்சியினர் பர்மிஷன் வாங்குன நிலையில, மாலை 5.30 மணி தொடங்க வேண்டிய சிறப்புரை, முடிய வேண்டிய நேரமான 6.30 மணிக்கு தான் தொடங்கியிருக்கு. சீமான் பேசினா அவ்வளவு சீக்கிரம் முடியுமா.? அவர் பாட்டுக்கு இரவு 9.15 மணி வரைக்கும் பேசியிருக்கார். இத பார்த்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஒருத்தரு, தேர்தல் விதிகள மீறி, அனுமதி வழங்குன நேரத்துக்கு மேல பரப்புரை செஞ்சதா, கருங்கல்பாளையம் காவல்நிலையத்துல புகார் கொடுத்துருக்கார்.
இந்த புகாரின் பேர்ல, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 5 பேர் மேல வழக்கு போட்டுருக்காங்களாம். ஏற்கனவே, தேர்தல் விதிமுறைய மீறுனதா சீமான் மேல 4 வழக்குகள் இருக்காம். இப்போ, இந்த 5-வது வழக்கும் சேர்ந்துருச்சு.
என்னதான் வழக்குகளுக்கு அஞ்சலைன்னாலும், அதுக்காக இப்படியா தொடர்ந்து வழக்கு வேட்டை நடத்துறதுன்னு, தொண்டர்களும், பொதுமக்களும் முனுமுனுக்குறாங்களாம்.!!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

