மேலும் அறிய

Auto Fare: உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? 12 வாரத்தில் மாற்றி அமைப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி

Auto Fare: கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கபப்டும் என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்துள்ளது. மேலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இறுதியாக ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. அப்போது மீட்டருக்கு கட்டணம் குறைந்தபட்சம் 1.5 கி.மீ க்கு ரூபாய் 25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கி.மீக்கு ரூபாய் 12 எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், காத்திருப்பு கட்டணம் அதாவது வைட்டிங் சார்ஜ் 5 நிமிடத்துக்கு ரூபாய் 3.50 ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்டோ சங்கங்கள் குறைந்தபட்ச தொகையை ரூபாய் 50 எனவும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 என நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்தது. மேலும் ஓலா ஊபர் போன்ற செயலியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் அல்லது அரசே தனியாக இதுபோன்ற செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.  

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மே மாதம் தொழிற்சங்கங்கள், பொது மக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. கருத்துக் கேட்ப்புக் கூட்டம் நடத்தப்பட்டதே தவிர, அரசு தரப்பில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.  

அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், ஆட்டோ செயலியைத் தொடங்கவும் கோரி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆகியோர் ஆகஸ்ட் மாதம்  28ஆம் தேதி  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை, நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதற்கு அமுதா ஐஏஎஸ், ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் எனவும் அரசு சார்பில் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்களிடம்  தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கபப்டும் என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. அதேபோல் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் தரப்பில் கட்டணம் உயர்வு குறித்த பேச்சுகள் சூடிபிடிக்கத் துவங்கியுள்ளது.  மேலும், தமிழ்நாடு அரசின் பதிலால் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Virat Kohli : ஃபிட்டாக இருக்கும் விராட் கோலிக்கு ரெஸ்ட் ஏன்..? பிசிசிஐ இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

ODI World Cup 2023: நீங்க கூட இருக்கும்போது எங்களுக்கு உலகக்கோப்பையை பார்த்து பயம் இல்லை - விராட் கோலி நெகிழ்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget