Liju Krishna: சினிமா இயக்குநர் மீது வன்கொடுமை புகார்.! ஷூட்டிங்கின்போதே அதிரடி கைது!! விசாரணை தீவிரம்!
கொச்சியைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளரான இளம்பெண் ஒருவர் மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கொடுத்த புகாரை அடுத்து மலையாள இயக்குநர் லிஜு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் இளம் நடிகரான சன்னி வெய்ன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடனும் அவர் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது படம் ஒன்றை தயாரித்து வருகிறார். படவெட்டு என்ற புதுப்படத்தை புதுமுக இயக்குநரான லிஜு கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார்.
View this post on Instagram
கொச்சியைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளரான இளம்பெண் ஒருவர் மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தில் இந்த புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் இயக்குநர் லிஜு கிருஷ்ணா, தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகினார். என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உடலுறவு மேற்கொண்டார். ஆனால் பின்னர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண் சினிமா கலைஞர் சங்கத்தினர் இந்த புகாரை கொச்சி போலீஸ் கமிஷ்னர் பார்வைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் இயக்குநர் லிஜுவை தேடிச் சென்றனர். கண்ணூரில் படப்பிடிப்பில் இருந்த இயக்குநரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குநர் கைதானதை அடுத்து தற்போது படவெட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது.