மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகளில் மிக மிக முக்கியமானவை.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு அரசுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி - வேலை நிறுத்தத்தை தொடங்கிய போக்குவரத்து தொழிற்சங்கள்
- போக்குவரத்து தொழிற்சங்கள் வேலை நிறுத்தம் - அரசு பேருந்துகள் வழக்கம்போல இயங்குமா என மக்கள் அச்சம்
- நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் - குறைவான அளவில் பேருந்துகள் இயக்கம்
- சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் அதிமுகவை விட அதிகம் முதலீடுகளை ஈர்த்துள்ளோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை - தமிழ்நாடு முழுவதும் இன்னும் இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
- வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாக அறிவிப்பு
- வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை தேவை - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு - பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அறிவிப்பு
- கலைஞர் 100 விழாவில் ரஜினி மற்றும் கமல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
இந்தியா:
- பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் அமைச்சர்கள் கருத்து - மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்த பயணிகள்
- பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்து - மாலத்தீவு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
- பிரதமருக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து - இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் கண்டனம்
- பெண்கள் அதிகாரம் பெற்றால் தான் நாடு வலிமை பெறும் - பிரதமர் மோடி கருத்து
- மீண்டும் வங்கதேச பிரதமராகும் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து
- பெண் பத்திரிக்கையாளரை அவமதித்த வழக்கில் நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்
- பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு அயோத்தியில் நடக்கவிருந்த குழந்தை ராமர் ஊர்வலம் ரத்து
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு - தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி குஜராத் பயணம்
உலகம்:
- ஜப்பானில் ஒரே வாரத்தில் 1200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் மக்கள் அச்சம்
- இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானதால் மக்கள் பீதி
- வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கருத்து
விளையாட்டு:
- ப்ரோ கபடி லீக் தொடரில் யு மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி
- மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - பி.வி.சிந்து பங்கேற்காததால் ரசிகர்கள் வருத்தம்
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வருண் தோமர்,இஷா சிங்குக்கு தங்கம்
- ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி எதிரொலி - டெல்லி அணி கேப்டன் யாஷ் துல் பதவி நீக்கம்
- ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion