TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எந்தெந்த இடங்கள் தெரியுமா.? பார்க்கலாம்...

தமிழ்நாட்டின்ஒருசில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
வானிலை மைய அறிக்கை கூறுகூது என்ன.?
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, தென் இந்திய பகுதி மற்றும் ராயல்சீமா, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்
இதன் காரணமாக, வரும் 8-ம் தி வரை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 9-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்
ஆகஸ்ட் 9-ம் தேதி, தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10 முதல் 12-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்
தமிழ்நாட்டில், வரும் 10 முதல் 12-ம் தேதி வரை, ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம் என்ன.?
சென்னை வானிலை மைய அறிக்கையின்படி, சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நாளையும்(07.08.25) வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.




















