மேலும் அறிய

சேலத்தில் மனு கொடுக்க கோவணத்துடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த விவசாயி விஜயகுமார் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார். இவரது குடும்ப சொத்தில் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பங்கையும் அவரது தந்தை மற்றும் சகோதரன் ஆசைதம்பியின் பங்குகளையும் தனது அனுபவத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த பாகப்பிரிவினை செல்லாது என்று கூறி இவரது சகோதரி செல்லம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆசைதம்பி தனது பங்கை ஈஸ்வரன் என்பவருக்கு விற்பனை செய்ய முயன்றபோது விஜயகுமார் பத்திரபதிவு அலுவலகத்தில் தடங்கல் மனு கொடுத்துள்ளார். அதனை பொருட்படுத்தாத பத்திர பதிவாளர் அடுத்தடுத்து 6 பேருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த விவசாயி விஜயகுமார் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்தார். அதனைக் கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சேலத்தில் மனு கொடுக்க கோவணத்துடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

இதுகுறித்து விவசாயி விஜயகுமார் கூறும் போது, தனது சகோதரர்களிடம் இறுதியாக வாங்கிய சண்முகம் என்பவர் திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவருடன் இணைந்து தனது பங்கு உள்பட தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், அதிலிருந்து தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்று விட்டதாகவும், அதனை தட்டிகேட்டபோது அடிஆட்களை கொண்டு தன்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், அதன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னும் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார் உனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தனது நிலம் பறிக்கப்பட்டுள்ளதாலும் நிராயுதபாணியாக இருப்பதால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க குடும்பத்துடன் வந்துள்ளதாக விவசாயி விஜயகுமார் தெரிவித்தார்.

சேலத்தில் மனு கொடுக்க கோவணத்துடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

இதேபோன்று சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்ஜினியரான இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்கும் முறச்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை எடுத்து தடுத்து நிறுத்தினர். இது குறித்து இளைஞர் கூறுகையில், நான்கு ரோடு பகுதியில் முகில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினர். அதனை நம்பி நான் மூன்று லட்ச ரூபாய் கட்டினேன். ஒரு வருடம் ஆகியும் இதுவரை வட்டியும் தரவில்லை, அசலும் தரவில்லை. பணத்தை திருப்பி தர கேட்டதற்கு நிதி நிறுவன அதிபர் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணத்தை இழந்து என்னால் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. வேறு வழி இன்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்தார். நிர்வாகம் நிதி நிறுவன அதிபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பட்டதாரி வாலிபரை டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை மீட்டு தரக்கோரி பட்டதாரி வாலிபர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Embed widget