மேலும் அறிய

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாது ஏன்? அமலாக்கத்துறை விளக்கம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதால், மருத்துவர்களின்  வேண்டுகோளின் படி, அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதால், மருத்துவர்களின்  வேண்டுகோளின் படி, அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த வழக்கில் கடந்த 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அதாவது இன்று வரை விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், இன்றுடன் விசாராணை செய்வதற்கான கெடு முடிவடையும் நிலையில், வீடியோ கான்ஃப்ரன்ஸில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகலாம் எனவும் கூறப்படுகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜீன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. அப்போது, அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மற்றும் ஈரோட்டில் உள்ள இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.  17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன் பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர்களும் முதலமைச்சரும் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர். அமைச்சர் கைது செய்யப்பட்டுவிட்டார் என தகவல் வெளியானதும், கரூர் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் பாஜகவினர் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது. 

இதற்கிடையில், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு ரத்த நாளத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை மருத்துவர் பரிந்துரைத்தார். அதன் பின்னர்  மருத்துவமனைக்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லி  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைதினை உறுதி செய்தார். மேலும், அவரை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

இதன் பின்னர், நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், மனு அளிப்பட்டது, இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை 8 நாட்கள் மட்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்ததுடன், அவரது சிகிச்சைக்கு தொந்தரவு தரக்கூடாது என அறிவுருத்தியது. இதற்கிடையில், புழல் சிறையில் அமைச்சருக்கு 1440 என்ற கைதி எண் வழங்கப்பட்டது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் கோரிக்கையின் பேரில், அரசு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது வரை அங்கு சிகிச்சையில் உள்ள அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழு மிகக்தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

 மருத்துவர் ரகுராமன்  தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதிகாலை 5  மணியளவில் தொடங்கிய இதற்கான அறுவை சிகிச்சை நடைமுறை சுமார் 5 மணி நேரம் நீடித்து 10 மணியளவில் நிறைவடைந்தது. இதனால், அமலாக்கத்துறை மருத்துவரின் வேண்டுகோளின் பேரில் விசாரணை செய்யவில்லை என நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Aadhav Arjuna : ”சொன்ன வேலையை செய்யாமல், சொந்த வேலையை பார்ப்பதா?” ஆதவ் அர்ஜூனா ரெய்டு பகீர் பின்னணி..!
Aadhav Arjuna : ”சொன்ன வேலையை செய்யாமல், சொந்த வேலையை பார்ப்பதா?” ஆதவ் அர்ஜூனா ரெய்டு பகீர் பின்னணி..!
Embed widget