Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
NTK Seeman Appeals SC: சீமானுக்கு எதிராக உள்ள பாலியல் புகாரை, உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிரபல நடிகை பாலியல் புகார் அளித்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, காவல்துறை சம்மன் அனுப்பியது. அந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார், சீமான்.
சீமான் மீது புகார்:
கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பிரபல நடிகை, தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார் , அந்த நடிகை. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டும் , சீமானுக்கு எதிராக பாலியல் புகாரையும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார், அதே நடிகை.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை:
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யுமாறு, சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, நீதிமன்றத்தின் உத்தரவானது, சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் நடிகையின் குடும்பத்தினர் சீமானை அணுகி உள்ளனர். சீமான், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானின் வற்புறுத்தலால் ஏழு முறை கரு கலைப்பும் நடிகை செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம் இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார் என்றும் சீமானுக்கு எதிராக நடிகையின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக நடிகை கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
12 வாரங்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும்:
வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான்,புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றம் 12 வாரங்கள் காலக்கெடு விடுத்ததையடுத்து, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை சம்மன் அனுப்பியது.
உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரில், வளசரவாக்கத்தில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் இன்று நோட்டீஸ் ஒட்டபட்டது. அதில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், சீமான் ஆதரவாளர், நோட்டீசை கிழித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், சீமான் ஆதரவாளர் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Also Read: சீமான் வீட்டிற்குச் சென்ற காவலரை நோக்கி துப்பாக்கி காட்டியவர் யார்? குவியும் நாதகவினர்.!
இந்நிலையில், உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் சீமான். அதில் 12 வாரங்களுக்குள் வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது, இந்த வாரத்திற்குள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















