மேலும் அறிய
இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன் - காதலர் தினத்தில் செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி
தி.மு.க., ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
Source : whats app
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்திநகர் பகுதியில் பேரூராட்சி சேர்மன் கலா மீனா ராஜா ஏற்பாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சுமார் புதிய அங்கன்வாடி மைய 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் திறப்பு விழா மற்றும் சந்தன மாரியம்மன் கோயில் அருகே பக்தர்களுக்கு புதிய நிழற்குடை அமைப்தற்கான 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்தார்.
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
அப்போது முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்குத் தொகுதி செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பின் போது...,”எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச் செயலாளர், முதலமைச்சர், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார் அவர் வழியில் நாங்கள் பணியாற்றுவோம். அண்ணன் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் சார் சொல்வதை அவர்களிடம் தான் கேட்ட வேண்டும். அதிமுக செயல்பாடுகள் குறித்து எடிப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். அவருக்கு பல்வேறு அனுபவங்கள் இருக்கிறது. இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன், என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன் என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள் என கூறி அனைவருக்கும் அன்பு தின காதலர் தின வாழ்த்துக்கள் என அவருக்கான பாணியில் தெரிவித்தார்.
வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பா??
ஜாமீன் மனுவில் வந்தவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து என்ன பயன், செந்தில் பாலாஜி இடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது. திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரை கலைஞர் பேசாத முதலமைச்சர் என்று கூறினார். ஆனால் ஒரே இரவில் 10 அமைச்சர்களை மாற்றியவர் எம்.ஜி.ஆர்., தொடர்ந்து அதில் இரண்டு பேருக்கு தான் அமைச்சர் பதவி கொடுத்தார். இது தான் சாட்டை சுழற்றுவது. தற்போது உள்ள முதல்வர் செய்வது அது அல்ல.
தி.மு.க., ஆட்சி பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை
அதிமுகவில் பிளவுகள் இல்லை. விஜய் ஒரு பிரபலமான நடிகர் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள், அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள், அ.தி.மு.க., ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தி.மு.க., ஆட்சி பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சாதிவெறியின் உச்சம்.. ‘நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்’ இளைஞரின் 2 கைகளை வெட்டிய கொடூரம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement