மேலும் அறிய

சாதிவெறியின் உச்சம்.. ‘நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்’ இளைஞரின் 2 கைகளை வெட்டிய கொடூரம்

சிவகங்கையில் புல்லட் ஓட்டிய காரணத்திற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை வெட்டிய கும்பலால் பரபரப்பு.

வசதியாக வாழ்ந்தது பிடிக்கவில்லை

 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தைச் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த  சேர்ந்த ராமன் - செல்லம்மா தம்பதிகளின் மகன் அய்யாசாமி (வயது19). இவர் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி., மேக்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமியின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விடவே அவருடைய அம்மா அய்யாசாமியின் அப்பாவின் தம்பியான பூமிநாதனை இரண்டாவதாக திருமணம் செய்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அந்த கிராமத்தில் சற்று வசதியாகவும், புதிதாக வீடுகள் கட்டியும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இது அதே கிராமத்தில் வாழ்ந்து வந்த மாற்று  சமூகத்தை சேர்ந்த இளைஞர்களான வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு இவர்களுக்கு பிடிக்கவில்லை.
 

நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்

 
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூமிநாதன் (சித்தப்பா) புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய மறுநாளே இவர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்து உள்ளார்கள். பூமிநாதனையும் அடிக்க முயற்சித்துள்ளார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். பிறகு ஊரில் வைத்து பேசி முடித்துள்ளார்கள், இதனை தொடர்ந்து நேற்று மாலை இளைஞர் கல்லூரி முடித்துவிட்டு வீடு வரும் பொழுது வீட்டின் அருகே வழி மறித்து ( குறிப்பிட்ட) இந்த ஜாதியில இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்.. என்று கூறி இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளார்கள் கை இருந்தால்தானே ஓட்ட முடியும் என்பது என்ற நோக்கத்துடன் அவர் கையை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 

வீட்டை அடித்து சேதம்

 
இந்நிலையில் அவரை அழைத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே அங்கிருந்து உயர் சிகிச்சையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் பூமி நாதனின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, வீட்டின் ஓடு சேதம் அடைந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இதில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்து சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  விசாரித்து வருகின்றனர். இதில் வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது காயமடைந்த ஐயா சாமிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் சேர்ப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Embed widget