மேலும் அறிய
Tamilnadu Roundup: 9 IAS அதிகாரிகள் மாற்றம்! விஜய்க்கு கனிமொழி வாழ்த்து.. கச்சத்தீவை விட்டுத்தர மாட்டோம்-தமிழ்நாட்டில் இதுவரை
Tamil Nadu Headlines(05-07-2025): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை வடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது காணலாம்.

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : twitter
- தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு.
- “தவெக தனித்துப் போட்டியிட்டால் திமுகவுக்கு சவால் இல்லை.. அதிமுக, தவெகவுக்கு வேண்டுமானால் சவாலாக இருக்கலாம்” நெல்லையில் திமுக எம்.பி. கனிமொழி பேட்டி
- சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை )உள்ளூர் விடுமுறை
- மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கபடும் நீரின் அளவானது 40,000 கன அடியாக அறிவிப்பு
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
- திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லைக்கு செங்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
- திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது
- மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பென்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு!
- "கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை.." - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்
- சென்னை சூளைமேட்டில் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்!
- சட்டம் ஒழுங்கின் லட்சணம் Sorry சொல்ற மாதிரி தான் இருக்கு.. அ.தி.மு.க. வழக்கறிஞர் இன்பதுரை விமர்சனம்...!
- டிரினிடாட் - டொபோகோ நாட்டின் அதிபர் கிறிஸ்டின் கங்காலூவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பிரதமர் மோடி பேச்சு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















