மேலும் அறிய
Madurai Hc : 24 மணி நேரமும் மதுவிற்பனை: வீடியோவை பார்த்த நீதிபதி அதிர்ச்சி!
திண்டுக்கல் நகர் பகுதியில் 24 மணி நேர சட்டவிரோத மதுவிற்பனை வீடியோவை பார்த்த - நீதிபதி அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.*
கள்ளகுறிச்சியில் சோகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 49 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், இந்த கள்ளச்சாராய கும்பலுக்கும் தி.மு.க., பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கை அரசியல் களத்தில் அனலை கிளப்பியிருக்கிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ”கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துகுமார். நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இவரை ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் டவுன் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
வீடியோக்ககையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பினருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என பாதிக்கப்பட்ட தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகள் 24 மணி நேரம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமான வீடியோக்ககையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
நீதிபதி அதிர்ச்சி
அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் கள்ளக்குறிச்சியில் பல அப்பாவிகள் இறந்து உள்ளனர். இதை போன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார். சட்ட விரோத மது விற்பனையை பொதுமக்களே சென்று வீடியோ புகைப்படம் எடுத்த பின்பும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
பதில் அளிக்க வேண்டும்
மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. இவர்களுக்கு உதவியாக உள்ள காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விவசாயம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion