குடும்பத்தோடு பாண்டியன் வீட்டிற்கு சென்ற தங்கமயில் - மனம் மாறினாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சோகமான விஷயங்களாகவே நடந்து வரும் நிலையில், இந்த வாரம் மயிலின் கர்ப்பம் சீரியலை மகிழ்ச்சியாக மாற்றி உள்ளது.

அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சிகள் ஒரு சில வாரங்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில்... முத்துவேல், சக்திவேல் வீட்டிற்கு திடீர் என வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அதோடு அது தொடர்பாக எந்த தகவலும் தற்போது வரை காடப்படவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? எந்தெந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதையெல்லாம் தாண்டி தங்கமயில் படிக்கவில்லை, ஹோட்டலில் வேலை பார்ப்பது தெரிந்து சரவணன் அவர்களது வீட்டிற்கு சென்று தங்கமயிலை விட்டுவிட்டு வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சரவணனிடம் சொல்ல அவர் நம்பவில்லை.

இதைத் தொடர்ந்து தங்கமயிலின் அம்மா பாக்கியம் தங்கமயிலை அழைத்துக் கொண்டு சரவணன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த வீட்டிற்கு முதல் வாரிசு தனது மகள் மூலமாக வரப் போகிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார். அதன் பிறகு அவர்களுக்கு ஸ்வீட் கொடுக்க, பாண்டியனும், சரவணனும் கடையில் இருந்து வீட்டிற்கு அவர்களுக்கும் இந்த தகவல் தெரியவருகிறது.
ஏற்கனவே தங்கமயில் கர்ப்பமாக இருப்பது சரவணனுக்கு தெரியும் நிலையில், இதைப் பற்றி பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. இறுதியாக தங்கமயில் மட்டியிட்டு கதறி அழ, ஒருவழியாக சரவணன் நம்பினார். தொடர்ந்து பாண்டியன் குழந்தைகளுக்கான தொட்டிலை எடுத்து வைக்க சொல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்படி எல்லாரும் ஹேப்பியாக இருந்து பல நாட்கள் ஆகிறது.
இந்த சம்பவம் குறித்து இன்னும் அரசி மற்றும் குமரவேல் குடும்பத்திற்கு தெரியாது. ஒருவேளை தெரிந்தால் என்ன நடக்கும், என்பது பற்றிய விவரங்கள் பின்னரே தெரியவரும். இதே போன்று செந்திலிடம் ரூ.10 லட்சம் பணத்தையும் கேட்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மீனா பாண்டியன் கேட்பதற்கு முன்பே அந்த பணத்தை லோன் போட்டு தயார் செய்து விடுவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.





















